Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 77 in Tamil

Present
  1. 1

    நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என் சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார்.

    To the chief Musician, to Jeduthun, A Psalm of Asaph. I cried unto God with my voice, [even] unto God with my voice; and he gave ear unto me.

  2. 2

    என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று.

    In the day of my trouble I sought the Lord: my sore ran in the night, and ceased not: my soul refused to be comforted.

  3. 3

    நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; நான் தியானிக்கும்போது என் ஆவி தொய்ந்துபோயிற்று. (சேலா.)

    I remembered God, and was troubled: I complained, and my spirit was overwhelmed. Selah.

  4. 4

    நான் தூங்காதபடி என் கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; நான் பேசமாட்டாதபடி சஞ்சலப்படுகிறேன்.

    Thou holdest mine eyes waking: I am so troubled that I cannot speak.

  5. 5

    பூர்வநாட்களையும், ஆதிகாலத்துவருஷங்களையும் சிந்திக்கிறேன்.

    I have considered the days of old, the years of ancient times.

  6. 6

    இராக்காலத்தில் என் சங்கீதத்தைநான் நினைத்து, என் இருதயத்தோடேசம்பாஷித்துக்கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சிசெய்தது.

    I call to remembrance my song in the night: I commune with mine own heart: and my spirit made diligent search.

  7. 7

    ஆண்டவர் நித்தியகாலமாய்த்தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயைசெய்யாதிருப்பாரோ?

    Will the Lord cast off for ever? and will he be favourable no more?

  8. 8

    அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றோ? வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோயிற்றோ?

    Is his mercy clean gone for ever? doth [his] promise fail for evermore?

  9. 9

    தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா.)

    Hath God forgotten to be gracious? hath he in anger shut up his tender mercies? Selah.

  10. 10

    அப்பொழுது நான்: இது என் பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன்.

    And I said, This [is] my infirmity: [but I will remember] the years of the right hand of the most High.

  11. 11

    கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்;

    I will remember the works of the LORD: surely I will remember thy wonders of old.

  12. 12

    உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.

    I will meditate also of all thy work, and talk of thy doings.

  13. 13

    தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது; நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்?

    Thy way, O God, [is] in the sanctuary: who [is so] great a God as [our] God?

  14. 14

    அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணினீர்.

    Thou [art] the God that doest wonders: thou hast declared thy strength among the people.

  15. 15

    யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் புத்திரராகிய உம்முடைய ஜனங்களை, உமது புயத்தினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா.)

    Thou hast with [thine] arm redeemed thy people, the sons of Jacob and Joseph. Selah.

  16. 16

    ஜலங்கள் உம்மைக் கண்டது; தேவனே, ஜலங்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது, ஆழங்களும் கலங்கினது.

    The waters saw thee, O God, the waters saw thee; they were afraid: the depths also were troubled.

  17. 17

    மேகங்கள் ஜலங்களைப் பொழிந்தது; ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது; உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது.

    The clouds poured out water: the skies sent out a sound: thine arrows also went abroad.

  18. 18

    உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது.

    The voice of thy thunder [was] in the heaven: the lightnings lightened the world: the earth trembled and shook.

  19. 19

    உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப் படாமற்போயிற்று.

    Thy way [is] in the sea, and thy path in the great waters, and thy footsteps are not known.

  20. 20

    மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது ஜனங்களை ஒரு ஆட்டுமந்தையைப்போல வழிநடத்தினீர். (ஆசாப் எழுதின மஸ்கீல் என்னும் போதக சங்கீதம்.)

    Thou leddest thy people like a flock by the hand of Moses and Aaron.

All chapters of Psalms · Tamil Bible

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.