Psalm 95 in Tamil
சங்கீதம் 95
- 1
கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள்.
O come, let us sing unto the LORD: let us make a joyful noise to the rock of our salvation.
- 2
துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம்.
Let us come before his presence with thanksgiving, and make a joyful noise unto him with psalms.
- 3
கர்த்தரே மகா தேவனும், எல்லாதேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்.
For the LORD [is] a great God, and a great King above all gods.
- 4
பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது; பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள்.
In his hand [are] the deep places of the earth: the strength of the hills [is] his also.
- 5
சமுத்திரம்அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று.
The sea [is] his, and he made it: and his hands formed the dry [land].
- 6
நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்துகுனிந்துமுழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.
O come, let us worship and bow down: let us kneel before the LORD our maker.
- 7
அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.
For he [is] our God; and we [are] the people of his pasture, and the sheep of his hand. To day if ye will hear his voice,
- 8
இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.
Harden not your heart, as in the provocation, [and] as [in] the day of temptation in the wilderness:
- 9
அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, என் கிரியையையும் கண்டார்கள்.
When your fathers tempted me, proved me, and saw my work.
- 10
நாற்பது வருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,
Forty years long was I grieved with [this] generation, and said, It [is] a people that do err in their heart, and they have not known my ways:
- 11
என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.
Unto whom I sware in my wrath that they should not enter into my rest.