Psalm 94 in Tamil
சங்கீதம் 94
- 1
நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தாவே, நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும்.
O LORD God, to whom vengeance belongeth; O God, to whom vengeance belongeth, shew thyself.
- 2
பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து, பெருமைக்காரருக்குப் பதிலளியும்.
Lift up thyself, thou judge of the earth: render a reward to the proud.
- 3
கர்த்தாவே, துன்மார்க்கர் எதுவரைக்கும் மகிழ்ந்து, துன்மார்க்கர் எதுவரைக்கும் களிகூர்ந்திருப்பார்கள்?
LORD, how long shall the wicked, how long shall the wicked triumph?
- 4
எதுவரைக்கும் அக்கிரமக்காரர் யாவரும் வாயாடி, கடினமாய்ப் பேசி, பெருமைபாராட்டுவார்கள்?
[How long] shall they utter [and] speak hard things? [and] all the workers of iniquity boast themselves?
- 5
கர்த்தாவே, அவர்கள் உமது ஜனத்தை நொறுக்கி, உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள்.
They break in pieces thy people, O LORD, and afflict thine heritage.
- 6
விதவையையும் பரதேசியையும் கொன்று, திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து:
They slay the widow and the stranger, and murder the fatherless.
- 7
கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள்.
Yet they say, The LORD shall not see, neither shall the God of Jacob regard [it].
- 8
ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?
Understand, ye brutish among the people: and [ye] fools, when will ye be wise?
- 9
காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?
He that planted the ear, shall he not hear? he that formed the eye, shall he not see?
- 10
ஜாதிகளை தண்டிக்கிறவர்கடிந்துகொள்ளாரோ? மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியாரோ?
He that chastiseth the heathen, shall not he correct? he that teacheth man knowledge, [shall not he know]?
- 11
மனுஷனுடையயோசனைகள்வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்.
The LORD knoweth the thoughts of man, that they [are] vanity.
- 12
கர்த்தாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீர் தீங்குநாட்களில் அமர்ந்திருக்கப்பண்ணி,
Blessed [is] the man whom thou chastenest, O LORD, and teachest him out of thy law;
- 13
சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.
That thou mayest give him rest from the days of adversity, until the pit be digged for the wicked.
- 14
கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.
For the LORD will not cast off his people, neither will he forsake his inheritance.
- 15
நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; செம்மையான இருதயத்தார் யாவரும் அதைப் பின்பற்றுவார்கள்.
But judgment shall return unto righteousness: and all the upright in heart shall follow it.
- 16
துன்மார்க்கருக்குவிரோதமாய் என் பட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்பவன் யார்?
Who will rise up for me against the evildoers? [or] who will stand up for me against the workers of iniquity?
- 17
கர்த்தர் எனக்குத் துணையாயிராவிட்டால், என் ஆத்துமா சீக்கிரமாய் மவுனத்தில் வாசம்பண்ணியிருக்கும்.
Unless the LORD [had been] my help, my soul had almost dwelt in silence.
- 18
என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.
When I said, My foot slippeth; thy mercy, O LORD, held me up.
- 19
என் உள்ளத்தில் விசாரங்கள்பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.
In the multitude of my thoughts within me thy comforts delight my soul.
- 20
தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற கொடுங்கோலாசனம் உமக்கு இசைந்திருக்குமோ?
Shall the throne of iniquity have fellowship with thee, which frameth mischief by a law?
- 21
அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள்.
They gather themselves together against the soul of the righteous, and condemn the innocent blood.
- 22
கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிறகன்மலையுமாயிருக்கிறார்.
But the LORD is my defence; and my God [is] the rock of my refuge.
- 23
அவர்களுடையஅக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிப்பார்; நம்முடைய தேவனாகிய கர்த்தரே அவர்களைச் சங்கரிப்பார்.
And he shall bring upon them their own iniquity, and shall cut them off in their own wickedness; [yea], the LORD our God shall cut them off.