Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Anpin Thaevan Yesu Lyricsஅன்பின் தேவன் இயேசு உன்னை இன்றே அழைக்கின்றார்

Artist to be confirmedCrossFaithHealing

Anpin Thaevan Yesu Lyrics in Tamil & English

Chorus

அன்பின் தேவன் இயேசு உன்னை இன்றே அழைக்கின்றார்

அவர் உன்னை அழைக்கின்றார்

உன் துன்பம் துயரம் கவலை நீக்க இன்றே அழைக்கின்றார்

உன்னை அழைக்கின்றார்

Anpin thaevan yesu unnai indrae azhaikkindraar

Avar unnai azhaikkindraar

Un thunpam thuyaram kavalai neekka indrae azhaikkindraar

Unnai azhaikkindraar

Verse 1

ரத்தம் தோய்ந்த கையை கண்டு சித்தம் தெளியாயோ

நித்தமாய் நீ காய்ந்த காலை முத்தம் செய்யாயோ

உத்தமர் இயேசு உந்தனுக்காக இத்தனை வாதையோ

சத்திய நாதர் சத்தமாய் அழைக்கும் சத்தம் கேளாயோ

Raththam thoyntha kaiyai kandu siththam theliyaayo

Niththamaay nee kaayntha kaalai muththam seyyaayo

Uththamar yesu unthanukkaaga iththanai vaathaiyo

Saththiya naathar saththamaay azhaikkum saththam kaelaayo

Verse 2

தீயின் கட்டு உலக மாயை எல்லாம் விரைந்தோடும்

நோயின் வாடை பார சுமைகள் சொன்னால் பரந்தோடும்

தாயின் பாசம் சேயின் நேசம் ஒருநாள் மறைந்தோடும்

ஆயின் வாக்கு மாறா இயேசு அன்போ வழிந்தோடும்

Theeyin kattu ulaga maayai ellaam virainthodum

Noyin vaadai paara sumaigal sonnaal paranthodum

Thaayin paasam saeyin naesam orunaal marainthodum

Aayin vaakku maaraa yesu anpo vazhinthodum

Anpin Thaevan Yesu PPT – PowerPoint Slides

Download அன்பின் தேவன் இயேசு உன்னை இன்றே அழைக்கின்றார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A