Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Azhagir Sirantha Koomaanai Lyricsஅழகிற் சிறந்த கோமானை

Artist to be confirmedPraiseWorship

Azhagir Sirantha Koomaanai Lyrics in Tamil & English

Verse 1

அழகிற் சிறந்த கோமானை நானெப்போ காண்பேனோ?

பழவினை தீர்த்த புண்ணியனைக் கண்டெப்போ மகிழ்வேனோ?

Azhagir sirantha komaanai naaneppo kaanpaeno?

Pazhavinai theerththa punniyanaik kandeppo magizhvaeno?

Verse 2

பூதலத்தில் நான் வேறொருவரை இப்படிக் கண்டிலேனே;

ஓதவுமறியேன் உன்னத அன்பை ஓயாத்துதி செய்வேன் – அழ

Poothalaththil naan vaeroruvarai ippadik kandilaenae;

Othavumariyaen unnatha anpai oyaaththuthi seyvaen – azha

Verse 3

இப்படிக்கொத்த பூரணனை இப்பூமியில் கண்டதுண்டோ?

செப்பிடப் பாதம் பொன் மயமாமே ஜோதி வடிவாமே – அழ

Ippadikkoththa poorananai ippoomiyil kandathundo?

Seppidap paatham pon mayamaamae jothi vadivaamae – azha

Verse 4

சுரரும், நரரும், போற்றுதற்குரிய சுந்தரநாயகனாம்;

வரமளித்தே தம் பக்தரைக் காக்கும் வல்ல பரண் சுதனாம் – அழ

Surarum, nararum, potrutharkuriya suntharanaayaganaam;

Varamaliththae tham paktharaik kaakkum valla paran suthanaam – azha

Verse 5

ஆசைக்கிசைந்த நேசரின் நாமம் இயேசுகிறிஸ்தென்பதாம்;

காசினியெங்கும் கேட்டறியாத கர்த்தன் திருப்பேராம் – அழ

Aasaikkisaintha naesarin naamam yesugiristhenpathaam;

Kaasiniyengum kaettariyaatha karththan thiruppaeraam – azha

Azhagir Sirantha Koomaanai PPT – PowerPoint Slides

Download அழகிற் சிறந்த கோமானை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A