Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Devanuku Magimai Seluthi Lyricsதேவனுக்கு மகிமை செலுத்தி பாடுவேன்

Artist to be confirmedPraiseFaith

Devanuku Magimai Seluthi Lyrics in Tamil & English

Verse 1

தேவனுக்கு மகிமை செலுத்தி பாடுவேன்

மனிதரோடு சீர் பொருந்தி வாழுவேன்

பூலோகம் அமைதி பெறும் வழிதனைக் கூறி

மேலோக ஆசியுண்டு முன்னேறுவேன் (×2)

Dhaevanukku magimai seluththi paaduvaen

Manidharoadu seer porundhi vaazhuvaen

Booloagam amaidhi perum vazhidhanai koori

Maeloaga aasiyundu munnaeruvaen (×2)

Verse 2

உள்ளத்து கசப்பினை வேர் அறுப்பேன்

எண்ணத்தில் தூய்மையை அணிந்தாலே

தேவனின் அன்பில் நிறைந்திடுவேன்

அதை நீதியின் கனிகளால் காட்டிடுவேன் (×2)

Ullathu kasappinai vaer aruppaen

Ennathil thooimaiyai anindhaalae

Dhaevanin anbil niraindhiduvaen

Adhai needhiyin kanigalaal kaattiduvean (×2)

Verse 3

மன்னித்தும் மறந்தும் வாழ்ந்திடுவேன்

பகைமைக்கு வழியின்றி நடந்திடுவேன்

இயேசுவின் சிந்தையை அணிந்திடுவேன்

நான் எல்லோரும் சரிநிகர் சமமென்பேன் (×2)

Mannithum marandhum vaazhndhiduvaen

Pagaimaikku vazhiyindri nadandhiduvaen

Yaesuvin sindhaiyai anindhiduvaen

Naan elloarum sarinigar samamenbaen (×2)

Verse 4

இயேசுவை மனதார பின் செல்லுவேன்

இக்கால மனிதருக்கு வழி சொல்லுவேன்

பிறர்மனம் கவர்ந்திட வாழ்ந்திடுவேன்

நன்கு சமுதாயம் செழித்தோங்க உழைத்திடுவேன் (×2)

Yaesuvai manadhaara pin selluvaen

Ikkaala manidharukku vazhi solluvean

Pirarmanam kavarndhida vaazhnthiduvaen

Nam samudhaayam sezhithoanga uzhaithiduvaen (×2)

Devanuku Magimai Seluthi PPT – PowerPoint Slides

Download தேவனுக்கு மகிமை செலுத்தி பாடுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with D