En Suvasa Katre En Lyrics in Tamil & English
Chorus
என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே
இறைவா என் உள்ளம் வருவாய்
என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே
தலைவா நீ உன்னைத் தருவாய்
என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே
இறைவா தலைவா அன்பினைப் பொழிவாய்
En suvaasak kaatrae en vaazhvin ootrae
Iraivaa en ullam varuvaay
Ennuyirin unavae en vaazhvin vazhiyae
Thalaivaa nee unnaith tharuvaay
En vaazhvum en valamum ellaamum neethaanae
Iraivaa thalaivaa anpinaip pozhivaay
Verse 1
என் சொந்தம் யாவும் என் தேவை யாவும்
நீதானே நீதானே இறைவா
என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம்
தருவாயே தருவாயே தலைவா
வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே
வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே (×2)
வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய்
En sontham yaavum en thaevai yaavum
Neethaanae neethaanae iraivaa
En nenjsil naesam maaraatha paasam
Tharuvaayae tharuvaayae thalaivaa
Vaazhnaalellaam nee vaendumae
Valarnthida naalum varam vaendumae (×2)
Vaazhvaay vazhiyaay nirainthida varuvaay
Verse 2
எழில் வானம் போல நிலைக்கும் உன் அன்பை
அறிவேனே அறிவேனே இறைவா
உனைப் போல நானும் பிறரன்பில் வளர
அருள்வாயே அருள்வாயே தலைவா
மகிழ்ந்திட நாளும் அருள் வேண்டுமே
ஒளிர்ந்திட நாளும் துணை வேண்டுமே (×2)
நிழலாய் நிறைவாய் வாழ்வினில் வருவாய்
Ezhil vaanam pola nilaikkum un anpai
Arivaenae arivaenae iraivaa
Unaip pola naanum piraranpil valara
Arulvaayae arulvaayae thalaivaa
Magizhnthida naalum arul vaendumae
Olirnthida naalum thunai vaendumae (×2)
Nizhalaay niraivaay vaazhvinil varuvaay
En Suvasa Katre En PPT – PowerPoint Slides
Download என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.