Ennai Maravaathavarae Lyrics in Tamil & English
Chorus
என்னை மறவாதவரே என்னில் நினைவானவரே
உம்மை நான் நம்புவேனைய்யா நேசர் இயேசய்யா
உயிருள்ள நாளெல்லாம் நான் நம்புவேனைய்யா
Ennai maravaathavarae ennil ninaivaanavarae
Ummai naan nambuvaenaiyyaa naesar yesayyaa
Uyirulla naalellaam naan nambuvaenaiyyaa
Verse 1
தாயானவள் தன் பாலனை மறந்தாலும் நான் மறவேனே
உன்னை எந்தன் உள்ளங்கையில் வரைந்து வைத்தேனே
உன்னை மறவாமல் எந்நாளும் நினைத்திடுவேனே
Thaayaanaval than paalanai maranthaalum naan maravaenae
Unnai enthan ullangaiyil varainthu vaiththaenae
Unnai maravaamal ennaalum ninaiththiduvaenae
Verse 2
இமைப்பொழுது எந்தன் முகத்தை மறைத்தாலும் உனக்கு இரங்குவேன்
மலைகள் விலகி பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்
எந்தன் சமாதானம் உன்னைவிட்டு விலகிவிடாது
Imaippozhuthu enthan mugaththai maraiththaalum unakku iranguvaen
Malaigal vilagi parvathangal nilaibeyarnthaalum
Enthan samaathaanam unnaivittu vilagividaathu
Verse 3
உன் தாய் உன்னை தேற்றிடும் போல நான் உன்னை தேற்றிடுவேனே
தண்ணீரைக் கடக்கும் போதும் உன்னுடன் இருப்பேன்
அக்கினியில் நடக்கும் போதும் கூடவே நடப்பேன்
Un thaay unnai thaetridum pola naan unnai thaetriduvaenae
Thanneeraik kadakkum pothum unnudan iruppaen
Akkiniyil nadakkum pothum koodavae nadappaen
Ennai Maravaathavarae PPT – PowerPoint Slides
Download என்னை மறவாதவரே என்னில் நினைவானவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.