Inba Yesu Raja Vai Naan Parthal Pothum Lyrics in Tamil & English
Chorus
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (×2)
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தாள் போதும் (×2)
Inba iyeasu raajaavai naan paarththaal poadhum
Magimaiyil avaroadu naan vaazhnthaal poadhum (×2)
Niththiyamaam moatcha veettil saerndhaal poadhum
Allaelooyaa koottaththil naan magizhndhaal poadhum (×2)
Verse 1
இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு (×2)
கறைதிரை அற்ற பரிசுத்தரோடு
ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (×2)
Yaesuvin raththathaalae meetkappattu
Vasanamaam vaeliyaalae kaakkappattu (×2)
Karaithirai atra parisuththaroadu
Aezhaiyaan pon veedhiyil ulaaviduvaen (×2)
Verse 2
தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது (×2)
அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (×2)
Thoodhargal veenaigalai meettum poadhu
Niraivaana jeya koasham muzhangum poadhu (×2)
Allaelooyaa geetham paadi kondu
Anbaraam yaesuvoadu agamagizhvaen (×2)
Verse 3
முள் கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் (×2)
வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து
ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன் (×2)
Mul kreedam sooddappatta thalaiyai paarppaen
Porkreedam sooddi naanum pugazhndhiduvaen (×2)
Vaarinaal adippatta muthugai paarththu
Ovvoru kaayangalaal muththam seivaen (×2)
Verse 4
என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே (×2)
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா (×2)
Ennullam nandriyaal niraindhidudhae
Endhanin baakkiya veettai ninaikkaiyilae (×2)
Allaelooyaa aamen allaelooyaa
Varnikka endhan naavu poadhaadhaiyaa (×2)
Verse 5
ஆஹா! எக்காலம் என்று முழங்கிடுமோ
ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ (×2)
அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமும் (×2)
Aahaa! ekkaalam endru muzhangidumoa
Aezhai en aaval endru theerththidumoa (×2)
Appaa! en kanneer endru thudaikkiraaroa
Aavalaai aengidudhae enadhullamum (×2)
Inba Yesu Raja Vai Naan Parthal Pothum PPT – PowerPoint Slides
Download இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.