Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kanni Thaai Mariyaal Varavetral Lyricsகன்னித்தாய் மரியாள் வரவேற்றாள் தெய்வமகன்

Artist to be confirmedPraiseWorship

Kanni Thaai Mariyaal Varavetral Lyrics in Tamil & English

Chorus

கன்னித்தாய் மரியாள் வரவேற்றாள் தெய்வமகன்

சிப்பியவள் பொற்குடத்தில் முத்தெனவே அவதரித்தார்

ஆவியினால் ஆண்டவனை

அவள் சுமக்கக் கொடுத்து வைத்தாள்!

Kanniththaay mariyaal varavaetraal theyvamagan

Sippiyaval porkudaththil muththenavae avathariththaar

Aaviyinaal aandavanai

Aval sumakkak koduththu vaiththaal!

Bridge

விண்ணுலகம் மகிழ்ந்து பண்பாடும்

மண்ணுலகம் வியந்து கொண்டாடும்

மனங்களில் அமைதி வென்றாளும்

மனிதரில் பாசம் உண்டாகும்

Vinnulagam magizhnthu panpaadum

Mannulagam viyanthu kondaadum

Manangalil amaithi vendraalum

Manitharil paasam undaagum

Verse 1

கிருபையினால் மா தேவன் – இரக்கம்

பெற்றாள் பணிந்ததினால்

மகிமையின் கர்த்தனிடம்

வலிமையின் தேவனிடம்

பலவான்கள் தலைகுனியும் – இனி

கனவான்கள் கைவிரியும்

Kirubaiyinaal maa thaevan – irakkam

Petraal paninthathinaal

Magimaiyin karththanidam

Valimaiyin thaevanidam

Palavaangal thalaiguniyum – ini

Kanavaangal kaiviriyum

Verse 2

தெய்வத்தின் நல் விருப்பம் – என்றும்

தெய்வமகன் விரும்பும் அப்பம்

ஜீவனின் அதிபதிதான்

ஜீவனைக் கொடுக்க வந்தார்

பாவத்தைத் தொலைக்க வந்தார் – வல்ல

சாத்தானை ஜெயிக்க வந்தார்

Theyvaththin nal viruppam – endrum

Theyvamagan virumbum appam

Jeevanin athibathithaan

Jeevanaik kodukka vanthaar

Paavaththaith tholaikka vanthaar – valla

Saaththaanai jeyikka vanthaar

Verse 3

மானுட அவதாரம் – ஒன்றே

ஆண்டவரின் திரு விருப்பம்

தாழ்ந்தவர் உயர்ந்திடுவார்

பசித்தவர் விருந்துண்பார்

புதியதோர் சமுதாயம் – இனி

மலர்ந்திடும் அவனியெங்கும்

Maanuda avathaaram – ondrae

Aandavarin thiru viruppam

Thaazhnthavar uyarnthiduvaar

Pasiththavar virunthunpaar

Puthiyathor samuthaayam – ini

Malarnthidum avaniyengum

Kanni Thaai Mariyaal Varavetral PPT – PowerPoint Slides

Download கன்னித்தாய் மரியாள் வரவேற்றாள் தெய்வமகன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K