Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kurusilae Marana Paadugal Lyricsகுருசிலே மரண பாடுகள்

Artist to be confirmedCrossWorship

Kurusilae Marana Paadugal Lyrics in Tamil & English

Chorus

குருசிலே மரண பாடுகள்

நினைக்கையிலே நெஞ்சம் நெகிழுதே (×2)

எனக்காக தானே இதை ஏற்றுக்கொண்டீர்

உம் அன்பை நான் என்ன சொல்வேன் (×2)

Kurusilae marana paadugal

Ninaikkaiyilae nenjsam negizhuthae (×2)

Enakkaaga thaanae ithai aetrukkondeer

Um anpai naan enna solvaen (×2)

Verse 1

எந்தன் அடிகள் எல்லாம்

உம் மேலே விழுந்ததே

என் சிந்தை மீறல்கள்

முள் முடியை தந்ததே (×2)

என்னை சிறப்பாக்கவே

சிறுமையானீரே

உம் அன்பை நான் என்ன சொல்வேன் (×2)

Enthan adigal ellaam

Um maelae vizhunthathae

En sinthai meeralkal

Mul mudiyai thanthathae (×2)

Ennai sirappaakkavae

Sirumaiyaaneerae

Um anpai naan enna solvaen (×2)

Verse 2

எந்தன் பாவ பாரத்தை

சிலுவையில் சுமந்தீரே

என்னை பரிசுத்தமாக்கவே

இரத்தம் சிந்தி மரித்தீரே (×2)

என்னை நீதிமானாக்க

நீர் நிந்தை ஏற்றீரே

உம் அன்பை நான் என்ன சொல்வேன் (×2)

Enthan paava paaraththai

Siluvaiyil sumantheerae

Ennai parisuththamaakkavae

Iraththam sinthi mariththeerae (×2)

Ennai neethimaanaakka

Neer ninthai aetreerae

Um anpai naan enna solvaen (×2)

Verse 3

எந்தன் தீய செயலினால்

ஆணி கரத்தில் பாய்ந்ததே

என் போக்கின் மீறலால்

கால்கள் கடாவப்பட்டதே (×2)

என்னை சுகமாக்கவே

நீர் காயப்பட்டீரே

உம் அன்பை நான் என்ன சொல்வேன் (×2)

Enthan theeya seyalinaal

Aani karaththil paaynthathae

En pokkin meeralaal

Kaalkal kadaavappattathae (×2)

Ennai sugamaakkavae

Neer kaayappatteerae

Um anpai naan enna solvaen (×2)

Verse 4

என் தீய பேச்சினால்

கசப்பு காடியை ருசித்தீரே

என் இதய கடினத்தால்

விலாவில் ஈட்டி பாய்ந்ததே (×2)

எந்தன் ஆக்கினை தீர்க்க

அலங்கோலம் ஆனீரே

உம் அன்பை நான் என்ன சொல்வேன் (×2)

En theeya paechinaal

Kasappu kaadiyai rusiththeerae

En ithaya kadinaththaal

Vilaavil eetti paaynthathae (×2)

Enthan aakkinai theerkka

Alangolam aaneerae

Um anpai naan enna solvaen (×2)

Kurusilae Marana Paadugal PPT – PowerPoint Slides

Download குருசிலே மரண பாடுகள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K