Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Loeka Maayaiyil Sikkaathae Lyricsலோக மாயையில் சிக்காதே

Artist to be confirmedFaith

Loeka Maayaiyil Sikkaathae Lyrics in Tamil & English

Chorus

லோக மாயையில் சிக்காதே

Loga maayaiyil sikkaathae

Verse 1

லோக மாயையில் சிக்காது நின்று

லோக இன்பத்தை அற்பமாய் எண்ணி

லோக ஞானத்தை நம்பாது சென்று

லோக ஆசையால் பற்றாது வாழ்வாய்

Loga maayaiyil sikkaathu nindru

Loga inpaththai arpamaay enni

Loga njaanaththai nambaathu sendru

Loga aasaiyaal patraathu vaazhvaay

Verse 2

தேவப்பிள்ளைகள் யார்க்கும் வருமே

லோக எண்ணமே லோக ஆசை

லோக வேஷமே கடந்துபோமே

பாவக்கடலில் தள்ளிக் கொல்லுமே

Thaevappillaigal yaarkkum varumae

Loga ennamae loga aasai

Loga vaeshamae kadanthubomae

Paavakkadalil thallik kollumae

Verse 3

தீர்க்கதரிசி பலரும் உண்டு

அப்போஸ்தலர்கள் அனேகர் உண்டு

மேய்ப்பர் ஊழியர் ஆகியோர்கூட

லோக நேசத்தால் குளிர்ந்து போனார்

Theerkkatharisi palarum undu

Apposthalarkal anaegar undu

Maeyppar oozhiyar aagiyorkooda

Loga naesaththaal kulirnthu ponaar

Verse 4

லோகப்பிரியம் கொள்வாரே மெல்ல

ஜெபத்தில் தளர்ச்சியுறுவாரே பின்னர்

வேதத்தின் மேலே வாஞ்சை இழப்பார்

சாட்சிமழுங்கிக் குப்பையாய்ப் போவார்

Logappiriyam kolvaarae mella

Jebaththil thalarchiyuruvaarae pinnar

Vaethaththin maelae vaanjsai izhappaar

Saatchimazhungik kuppaiyaayp povaar

Verse 5

சிம்சோன் தன் பெலன் மறைந்து செத்தான்

கேயாசி குஷ்டம் கண்டு துடித்தான்

தேமா விலகி ஓடியே போனான்

காரணம் ஏன்? லோகம் மேல் ஆசை!

Simson than pelan marainthu seththaan

Kaeyaasi kushdam kandu thudiththaan

Thaemaa vilagi odiyae ponaan

Kaaranam aen? logam mael aasai!

Verse 6

முந்நாள் நற்சாட்சி பகிர்ந்தோர் பலர்

இந்நாள் மழுங்கி வீழ்ந்ததற்குப் பதில்

லோகத்தின் மேலே நெஞ்சம் சென்றதால்

எச்சரிப்போடே வாழ்க்கை நடத்து

Munnaal narsaatchi pagirnthor palar

Innaal mazhungi veezhnthatharkup pathil

Logaththin maelae nenjsam sendrathaal

Echarippodae vaazhkkai nadaththu

Verse 7

தேவமைந்தனாம் இயேசுவே இராஜா

கலப்பை மீதே கைவைத்தேன் ஐயா

ஆசை எதையும் கடந்து நிற்க

வேண்டுகிறேனே அருள் கூரும் ஐயா

Thaevamainthanaam yesuvae iraajaa

Kalappai meethae kaivaiththaen aiyaa

Aasai ethaiyum kadanthu nirka

Vaendugiraenae arul koorum aiyaa

Loeka Maayaiyil Sikkaathae PPT – PowerPoint Slides

Download லோக மாயையில் சிக்காதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with L