Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paareer Gethsamane Poongavil Lyricsபாரீர் கெத்செமெனே பூங்காவில் என் நேசரையே

Artist to be confirmedCrossWorship

Paareer Gethsamane Poongavil Lyrics in Tamil & English

Chorus

பாரீர் கெத்செமெனே பூங்காவில் என் நேசரையே

பாவி யெனக்காய் வேண்டுதல் செய்திடும்

சத்தம் தொனித்திடுதே

Paareer kethsemenae poongaavil en naesaraiyae

Paavi yenakkaay vaenduthal seythidum

Saththam thoniththiduthae

Verse 1

தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்

தேவாதி தேவன் ஏகசுதன் படும்

பாடுகள் எனக்காகவே

Thaegamellaam varunthi sogamadainthavaraay

Thaevaathi thaevan aegasuthan padum

Paadugal enakkaagavae

Verse 2

அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்

எப்படியும் உம் சித்தம் செய்ய என்னைத் தத்தம்

செய்தேன் என்றாரே

Appaa ippaaththiramae neekkum nin siththamaanaal

Eppadiyum um siththam seyya ennaith thaththam

Seythaen endraarae

Verse 3

இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே

இம்மானுவேலன் உள்ளம் உருகியே

வேண்டுதல் செய்தனரே

Iraththaththin vaervaiyaalae meththavumae nanainthae

Immaanuvaelan ullam urugiyae

Vaenduthal seythanarae

Verse 4

மும்முறை தரைமீதே தாங்கொண்ணா வேதனையால்

முன்னவர் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே

பாதகர் மீட்புறவே

Mummurai tharaimeethae thaangonnaa vaethanaiyaal

Munnavar thaamae veezhnthu jebiththaarae

Paathagar meedpuravae

Verse 5

அன்பின் அருள்மொழியால் ஆறுதல் அளிப்பவர்

துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே

நெந்து அலறுகின்றார்

Anpin arulmozhiyaal aaruthal alippavar

Thunpa vaelaiyil thaetruvaarindriyae

Nenthu alarugindraar

Verse 6

என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மாநேசத்தை

எண்ணியெண்ணியே உள்ளங்கனிந்து நான்

என்றும் புகழ்ந்திடுவேன்

Ennaiyum thammaip pola maatrum immaanaesaththai

Enniyenniyae ullanganinthu naan

Endrum pugazhnthiduvaen

Paareer Gethsamane Poongavil PPT – PowerPoint Slides

Download பாரீர் கெத்செமெனே பூங்காவில் என் நேசரையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P