Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paavi Yesuthanai Thaane Thedi Lyricsபாவி யேசுனைத் தானே தேடி

Artist to be confirmedCrossWorship

Paavi Yesuthanai Thaane Thedi Lyrics in Tamil & English

Chorus

பாவி யேசுனைத் தானே தேடித் துயர் மேவினார்

இதைத் தியானியே

சரணங்கள்

Paavi yaesunaith thaanae thaedith thuyar maevinaar

Ithaith thiyaaniyae

Saranangal

Verse 1

பரம சீயோன் மலைக்கரசர் நற்பாலன்

பரிசுத்த தூதர் பணி செய்யும் பொற்பாதன்

மானிடனாக அவதரித்த தெய்வீகன்

வல்ல பேயை ஜெயித்த மாமனுவேலன்.

Parama seeyon malaikkarasar narpaalan

Parisuththa thoothar pani seyyum porpaathan

Maanidanaaga avathariththa theyveegan

Valla paeyai jeyiththa maamanuvaelan.

Verse 2

தீய பாவிகள் பாவ நித்திரை செய்ய

தேவ கோபாக்கினி அவர் மீதில் பெய்ய

தோஷம் சுமந்து யேசு தேவாட்டுக்குட்டி

துன்பக் கடலில் அமிழ்ந்தாற்றுதல் செய்ய.

Theeya paavigal paava niththirai seyya

Thaeva kobaakkini avar meethil peyya

Thosham sumanthu yaesu thaevaattukkutti

Thunpak kadalil amizhnthaatruthal seyya.

Verse 3

இந்தப் பாத்திரம் என்னை விட்டகலாதோ?

இல்லையானால் உமது இஷ்டமதென்றே

சிந்தை துயரடையச் செப்பினார், அன்றோ

சுவாமி உனக்காய் பிணைப்பட்டதால், அந்தோ!

Inthap paaththiram ennai vittagalaatho?

Illaiyaanaal umathu ishdamathendrae

Sinthai thuyaradaiyas seppinaar, andro

Suvaami unakkaay pinaippattathaal, antho!

Verse 4

கெத்சமனேயில் ஏசு பட்டதை நினையே

கேவலமான உன்தன் பாவத்தை மறவே

ஆத்தும நேசர் பதம் ஆவலாய் பணியே

அன்பின் கரத்தாலுனை அணைப்பார் நிச்சயமே.

Kethsamanaeyil aesu pattathai ninaiyae

Kaevalamaana unthan paavaththai maravae

Aaththuma naesar patham aavalaay paniyae

Anpin karaththaalunai anaippaar nichayamae.

Paavi Yesuthanai Thaane Thedi PPT – PowerPoint Slides

Download பாவி யேசுனைத் தானே தேடி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P