Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Samathanam Undupannum Lyricsசமாதானம் உண்டுபண்ணும்

Artist to be confirmedFaithHealing

Samathanam Undupannum Lyrics in Tamil & English

Chorus

சமாதானம் உண்டு பண்ணும் தகப்பனே

எனக்கும் சமாதானம் உண்டு பண்ணும் தகப்பனே (×2)

எனக்கும் சமாதானம் உனக்கும் சமாதானம்

எங்கும் சமாதானம் எதிலும் சமாதானம் (×2)

Samaathaanam undu pannum thagappanae

Enakkum samaathaanam undu pannum thagappanae (×2)

Enakkum samaathaanam unakkum samaathaanam

Engum samaathaanam ethilum samaathaanam (×2)

Verse 1

காரிருள் சூழ்ந்த எந்தன் வாழ்விலே

உள்ளக் காயத்தோடு தவிக்கும் இந்த நாளிலே (×2)

என்னை தேற்றிடவே ஏசுவே வாருமையா

காயம் ஆற்றிடவே கிருபை தாருமையா (×2)

Kaarirul soozhntha enthan vaazhvilae

Ullak kaayaththodu thavikkum intha naalilae (×2)

Ennai thaetridavae aesuvae vaarumaiyaa

Kaayam aatridavae kirubai thaarumaiyaa (×2)

Verse 2

உறவுகள் என்னை வெறுத்த நாளிலே நான்

கூனி குறுகி வாழ்ந்து வந்த வாழ்க்கையை (×2)

சமாதானம் உண்டாக்கியே சந்தோஷம் பெறுக செய்தீர்

எதிர்த்த உறவுகளை என்வசம் ஒப்படைத்தீர் (×2)

Uravugal ennai veruththa naalilae naan

Kooni kurugi vaazhnthu vantha vaazhkkaiyai (×2)

Samaathaanam undaakkiyae santhosham peruga seytheer

Ethirththa uravugalai envasam oppadaiththeer (×2)

Verse 3

இந்தியாவில் சமாதானம் நிலைக்கவே

இந்த ஏழை மக்கள் வாழ்க்கை நிலை உயரவே (×2)

ஏழைகளின் அதிபதியே சீக்கிரம் வாருமையா

உமது வார்த்தையாலே சமாதானம் தாருமையா (×2)

Inthiyaavil samaathaanam nilaikkavae

Intha aezhai makkal vaazhkkai nilai uyaravae (×2)

Aezhaigalin athibathiyae seekkiram vaarumaiyaa

Umathu vaarththaiyaalae samaathaanam thaarumaiyaa (×2)

Verse 4

என் குடும்பம் சபையில் சமாதானம் வேண்டுமே

என் ஊழியத்தில் சமாதானம் வேண்டுமே (×2)

சமாதான காரணரே ஏசுவே நீங்கதாப்பா

சந்தோஷம் தருபவரும் ஏசுவே நீங்கதாப்பா (×2)

En kudumbam sabaiyil samaathaanam vaendumae

En oozhiyaththil samaathaanam vaendumae (×2)

Samaathaana kaaranarae aesuvae neengathaappaa

Santhosham tharubavarum aesuvae neengathaappaa (×2)

Verse 5

சமாதானம் தந்து விட்டீர் தகப்பனே

எனக்கும் சமாதானம் தந்து விட்டீர் தகப்பனே

சபையில் சமாதானம் குடும்பத்தில் சமாதானம்

ஊழியத்தில் சமாதானம் உறவிலே சமாதானம்

Samaathaanam thanthu vitteer thagappanae

Enakkum samaathaanam thanthu vitteer thagappanae

Sabaiyil samaathaanam kudumbaththil samaathaanam

Oozhiyaththil samaathaanam uravilae samaathaanam

Samathanam Undupannum PPT – PowerPoint Slides

Download சமாதானம் உண்டுபண்ணும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S