Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaanga Amma Vaanga Lyricsஐயா வாங்க அம்மா வாங்க

Artist to be confirmedPraiseHoly Spirit

Vaanga Amma Vaanga Lyrics in Tamil & English

Chorus

ஐயா வாங்க அம்மா வாங்க

இயேசு நல்ல மீட்பர் தானுங்க (×2)

Aiyaa vaanga ammaa vaanga

Yesu nalla meedpar thaanunga (×2)

Verse 1

பாவத்தின் சம்பளம் மரணமுன்னு சொன்னாங்க (×2)

பாவத்த விட்டிடுங்க இரட்சிப்ப பெற்றிடுங்க (×2)

மீண்டும் பிறந்திடுங்க ஆவிய பெற்றிடுங்க – நீங்க

மீண்டும் பிறந்திடுங்க பரிசுத்த ஆவிய பெற்றிடுங்க

Paavaththin sambalam maranamunnu sonnaanga (×2)

Paavaththa vittidunga ratchippa petridunga (×2)

Meendum piranthidunga aaviya petridunga – neenga

Meendum piranthidunga parisuththa aaviya petridunga

Verse 2

தேவாதி தேவனை துதித்து பாடுங்க அல்லேலூயா (×2)

அன்பை கூறிடுவோம் நேசத்தை சொல்லிடுவோம் (×2)

ஆத்தும ஆதாயம் எப்பவும் செய்திடுவோம் – வாங்க (×2)

Thaevaathi thaevanai thuthiththu paadunga allaelooyaa (×2)

Anpai kooriduvom naesaththai solliduvom (×2)

Aaththuma aathaayam eppavum seythiduvom – vaanga (×2)

Verse 3

வேதத்தை தினமும் வாசிச்சு பாருங்க அல்லேலூயா (×2)

வாங்க ஜெபித்திடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம் (×2)

இயேசுவின் நாமத்தினால் வெற்றியை பெற்றிடுவோம் – எப்பவும் (×2)

Vaethaththai thinamum vaasichu paarunga allaelooyaa (×2)

Vaanga jebiththiduvom saatchiyaay vaazhnthiduvom (×2)

Yesuvin naamaththinaal vetriyai petriduvom – eppavum (×2)

Verse 4

கர்த்தரை பாடியே கைத்தலம் போடுங்க அல்லேலூயா (×2)

ஆனந்தம் பாடிடுவோம் அற்புதம் கூறிடுவோம்

ஆனந்தம் பாடிடுவோம் அவர் அற்புதம் கூறிடுவோம்

ஆடி பாடிடுவோம் ஆமென் அல்லேலூயா – வாங்க (×2)

Karththarai paadiyae kaiththalam podunga allaelooyaa (×2)

Aanantham paadiduvom arputham kooriduvom

Aanantham paadiduvom avar arputham kooriduvom

Aadi paadiduvom aamen allaelooyaa – vaanga (×2)

Vaanga Amma Vaanga PPT – PowerPoint Slides

Download ஐயா வாங்க அம்மா வாங்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V