Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vanthae Kadaikan Paarumean Lyricsவந்தே கடைக்கண் பாருமேன்

HealingFaith

Also searched as: Vande Kadaikan Paarumen

Vanthae Kadaikan Paarumean Lyrics in Tamil & English

Chorus

வந்தே கடைக்கண் பாருமேன்,-சர்வேசுரனே,

வந்தே கடைக்கண் பாருமேன்.

சரணங்கள்

Vanthae kadaikkan paarumaen,-sarvaesuranae,

Vanthae kadaikkan paarumaen.

Saranangal

Verse 1

வந்தே கடைக்கண் பாரும் மானிடர் மீதிரங்கி,

எந்தா, துயரம் யாவும் எவ்விதமும் நீக்க.

Vanthae kadaikkan paarum maanidar meethirangi,

Enthaa, thuyaram yaavum evvithamum neekka.

Verse 2

கொள்ளை நோய் மிகுத்ததின் கொடுமை பெருக்கமாச்சே;

வள்ளலுன் சகாயத்தால் மாற்றும் கருணைத் தேவே!

Kollai noy miguththathin kodumai perukkamaachae;

Vallalun sagaayaththaal maatrum karunaith thaevae!

Verse 3

எண்ணா வேளை வாலரும் இறந்துபோறார், ஐயோ!

கண்ணீர் சொரியும்மாந்தர் கலக்கம் அனைத்தும்போக்க,

Ennaa vaelai vaalarum iranthuboraar, aiyo!

Kanneer soriyummaanthar kalakkam anaiththumbokka,

Verse 4

எங்கே விரைந் தோடுவோம், இறைவா? உமை அல்லாமல்

எங்கள் தஞ்சம் வேறாரும் இல்லை; சரணம், ஐயா!

Engae virain thoduvom, iraivaa? umai allaamal

Engal thanjsam vaeraarum illai; saranam, aiyaa!

Verse 5

மானிடர் துயரத்தால் மறுகியே திரிகின்றோம்;

ஏன் இந்தக் கஸ்தி யாவும் எந்தையே? கண்பாருமேன்.

Maanidar thuyaraththaal marugiyae thirigindrom;

Aen inthak kasthi yaavum enthaiyae? kanpaarumaen.

Verse 6

எந்த மட்டும் இந்நோயால் ஈனர் எமை வாதிப்பீர்?

அந்தி, சந்தி அலறும் ஆதுலர் மீதிரங்கி.

Entha mattum innoyaal eenar emai vaathippeer?

Anthi, santhi alarum aathular meethirangi.

Verse 7

வாரும், கருணாகரா; வந்தே கொள்ளை நோயதைத்

தீரும் இவ்வேளை தானே தீனர் எம்மீதினின்றே.

Vaarum, karunaagaraa; vanthae kollai noyathaith

Theerum ivvaelai thaanae theenar emmeethinindrae.

Vanthae Kadaikan Paarumean PPT – PowerPoint Slides

Download வந்தே கடைக்கண் பாருமேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைளைச்செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.

    And said, If thou wilt diligently hearken to the voice of the LORD thy God, and wilt do that which is right in his sight, and wilt give ear to his commandments, and keep all his statutes, I will put none of these diseases upon thee, which I have brought upon the Egyptians: for I [am] the LORD that healeth thee.

    Exodus 15:26 (யாத்திராகமம் 15:26)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Healing verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with V