Vanna Vanna Leelimalar Lyrics in Tamil & English
Chorus
அன்னையாய் அருளமுதாய் நல் ஆசானாய்
அருமருந்தாய் விண்ணவர்கரசியாய்
மண்ணில் உயிர்க்கெல்லாம் மாதாவாய்
மாசிலாக் கன்னியாய் கர்த்தனை ஈன்ற தவமே
தவத்தின் உருப்பயனே என் தாயான அம்மா (×2)
Annaiyaay arulamuthaay nal aasaanaay
Arumarunthaay vinnavarkarasiyaay
Mannil uyirkkellaam maathaavaay
Maasilaak kanniyaay karththanai eendra thavamae
Thavaththin uruppayanae en thaayaana ammaa (×2)
Verse 1
வண்ண வண்ண லீலிமலர் அன்னைமரி நீயே ஆரோக்கியத்தாயே
கண்ணல் சுவை தேனமுதே கன்னிமரியாயே (×2)
தன்னை ஈன்ற புவிக்களித்த இறைவன் திருமகன் உன்னை
தாயாக ஆசி தந்தான் தான் பிறக்கும் முன்னே (×2)
Vanna vanna leelimalar annaimari neeyae aarokkiyaththaayae
Kannal suvai thaenamuthae kannimariyaayae (×2)
Thannai eendra puvikkaliththa iraivan thirumagan unnai
Thaayaaga aasi thanthaan thaan pirakkum munnae (×2)
Verse 2
அள்ள அள்ளக் குறையாத ஆழியம்மா உனதுள்ளம் தெள்ளுதமிழ் காவியமாய் தித்திக்கும் கருணை வெள்ளம் (×2)
வள்ள லம்மா எங்களையே வாழவைக்கும் தாய் அம்மா
எல்லை யில்லா பேரின்பத்தின் எழில்வாசல் திருவிளக்கே (×2)
Alla allak kuraiyaatha aazhiyammaa unathullam thelluthamizh kaaviyamaay thiththikkum karunai vellam (×2)
Valla lammaa engalaiyae vaazhavaikkum thaay ammaa
Ellai yillaa paerinpaththin ezhilvaasal thiruvilakkae (×2)
Verse 3
தாளாத நோய்க் கொடுமைக் காளாகித் தவித்து நின்றோம்
கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்ப்பவளே (×2)
வேளாங்கண்ணி யமர்ந்த வேதநாயகன் தாயே
ஆதார நீர்ச்சுனையே ஆரோக்கியமாமரியே (×2)
Thaalaatha noyk kodumaik kaalaagith thaviththu nindrom
Kodaana kodi makkal kuraigalaith theerppavalae (×2)
Vaelaanganni yamarntha vaethanaayagan thaayae
Aathaara neerchunaiyae aarokkiyamaamariyae (×2)
Vanna Vanna Leelimalar PPT – PowerPoint Slides
Download அன்னையாய் அருளமுதாய் நல் ஆசானாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.