2 Corinthians 10:12 in Tamil
ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல.
Aagilum thangalaiththaangalae mechikkollugira silarukku naangal engalais sariyaakkavum oppidavum thuniyamaattom; thangalaikkondu thangalai alanthugondu, thangalukkae thangalai oppittukkollugira avarkal puththimaangalalla.
2 Corinthians 10:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எனவே, தங்களைத்தாங்களே பெருமைப்படுத்திக் கொள்கிற சிலருக்கு நாங்கள் எங்களை சரியாக்கவும், ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களையே அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்கிற அவர்கள் புத்திமான்கள் இல்லை.
- Open Tamil Contemporary Version
- உங்கள் மத்தியில் தங்களை உயர்வாய்க் காட்டிக்கொள்கிறவர்களுடன், எங்களை இணைத்துப் பார்க்கவோ அல்லது ஒப்பிட்டுப் பார்க்கவோ நாங்கள் துணிவதில்லை. அவர்கள் தங்கள் சொந்த அளவீடுகளினாலேயே, தங்களை மதிப்பீடு செய்துகொள்ளும்போதும், தங்களை ஒருவரோடு ஒருவர் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளும்போதும், அவர்கள் கொஞ்சமும் ஞானமில்லாதவர்களாய் இருக்கிறார்களே.
- Tamil Easy Reading Version
- தம்மைத் தாமே முக்கியமானவர்கள் என்று பெருமை பேசிக்கொள்ளும் குழுவுடன் சேர நாங்கள் விரும்பவில்லை. எங்களை அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்க விரும்பமாட்டோம். அவர்களைப் போன்று ஆகவும் விரும்பமாட்டோம். அவர்கள் தங்களைக்கொண்டே தங்களை அளக்கிறார்கள். தங்களைக்கொண்டே தங்களை ஒப்பிடுகின்றனர். அவர்கள் அறிவுள்ளவர்கள் அல்ல.
2 Corinthians 10:12 in English
- King James Version (KJV)
- For we dare not make ourselves of the number, or compare ourselves with some that commend themselves: but they measuring themselves by themselves, and comparing themselves among themselves, are not wise.
- World English Bible (WEB)
- For we are not bold to number or compare ourselves with some of those who commend themselves. But they themselves, measuring themselves by themselves, and comparing themselves with themselves, are without understanding.
- American Standard Version (ASV)
- For we are not bold to number or compare ourselves with certain of them that commend themselves: but they themselves, measuring themselves by themselves, and comparing themselves with themselves, are without understanding.
- Bible in Basic English (BBE)
- For we will not make comparison of ourselves with some of those who say good things about themselves: but these, measuring themselves by themselves, and making comparison of themselves with themselves, are not wise.
- Darby Translation (DBY)
- For we dare not class ourselves or compare ourselves with some who commend themselves; but these, measuring themselves by themselves, and comparing themselves with themselves, are not intelligent.
- Webster's Bible (WBS)
- For we dare not make ourselves of the number, or compare ourselves with some that commend themselves: but they measuring themselves by themselves, and comparing themselves among themselves, are not wise.
- Young's Literal Translation (YLT)
- For we do not make bold to rank or to compare ourselves with certain of those commending themselves, but they, among themselves measuring themselves, and comparing themselves with themselves, are not wise,
Read in context
- 10அவனுடைய நிருபங்கள் பாரயோசனையும் பலமுமுள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமுமாயிருக்கிறதென்கிறார்களே.
- 11அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ, அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம் என்று சிந்திக்கக்கடவன்.
- 12ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல.
- 13நாங்கள் அளவுக்கு மிஞ்சி மேன்மைபாராட்டாமல், உங்களிடம்வரைக்கும் வந்தெட்டத்தக்கதாக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம்.
- 14உங்களிடத்தில் வந்தெட்டாதவர்களாய் நாங்கள் அளவுக்கு மிஞ்சிப்போகிறதில்லை; நாங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து உங்களிடம்வரைக்கும் வந்தோமே.
Cross references
- Proverbs 27:2 நீதிமொழிகள் 27:2உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.
- Proverbs 26:12 நீதிமொழிகள் 26:12தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்.
- 2 Corinthians 10:18 2 கொரிந்தியர் 10:18தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.
- Luke 18:11 லூக்கா 18:11பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
- Romans 15:18 ரோமர் 15:18புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டுநடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல்வேறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை.
- 2 Corinthians 3:1 2 கொரிந்தியர் 3:1எங்களை நாங்களே மறுபடியும் மெச்சிக்கொள்ளத் தொடங்குகிறோமா? அல்லது சிலருக்கு வேண்டியதாயிருக்கிறது போல, உங்களுக்கு உபசார நிருபங்களை அனுப்பவும், உங்களிடத்தில் உபசார நிருபங்களைப் பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு வேண்டியதோ?
- Proverbs 25:27 நீதிமொழிகள் 25:27தேனை மிகுதியாய் உண்பது நல்லதல்ல, தற்புகழை நாடுவதும் புகழல்ல.
- Job 12:2 யோபு 12:2ஆம், நீங்களே ஞானமுள்ள ஜனங்கள்; உங்களுடனே ஞானம் சாகும்.
- 2 Corinthians 5:12 2 கொரிந்தியர் 5:12இதனாலே நாங்கள் உங்களுக்கு முன்பாக எங்களை மறுபடியும் மெச்சிக்கொள்ளாமல், இருதயத்திலல்ல, வெளிவேஷத்தில் மேன்மைபாராட்டுகிறவர்களுக்கு எதிரே எங்களைக்குறித்து நீங்கள் மேன்மைபாராட்டும்படிக்கு ஏதுவுண்டாக்குகிறோம்.
Original words (Greek)
- For · G1063γάρ gár
- dare · G5111τολμάω tolmáō
- not · G3756οὐ ou
- number · G1469ἐγκρίνω enkrínō
- or · G2228ἤ ḗ
- compare · G4793συγκρίνω synkrínō
- ourselves · G1438ἑαυτοῦ heautoû
- some · G5100τὶς tìs
- commend · G4921συνιστάω synistáō
- themselves · G1438ἑαυτοῦ heautoû
- but · G235ἀλλά allá
- they · G846αὐτός autós
- measuring · G3354μετρέω metréō
- themselves · G1438ἑαυτοῦ heautoû
- by · G1722ἐν en
- themselves · G1438ἑαυτοῦ heautoû
- and · G2532καί kaí
- comparing · G4793συγκρίνω synkrínō
- themselves · G1438ἑαυτοῦ heautoû
- themselves · G1438ἑαυτοῦ heautoû
- are · G4920συνίημι syníēmi
- not · G3756οὐ ou
- wise · G4920συνίημι syníēmi
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.