Ecclesiastes 10 in Tamil
பிரசங்கி 10
- 1
செத்த ஈக்கள் தைலக்காரனுடையபரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்.
Dead flies cause the ointment of the apothecary to send forth a stinking savour: [so doth] a little folly him that is in reputation for wisdom [and] honour.
- 2
ஞானியின் இருதயம் வலதுகையிலும், மூடனின் இருதயமோ இடதுகையிலும் இருக்கும்.
A wise man’s heart [is] at his right hand; but a fool’s heart at his left.
- 3
மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாயிருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லாருக்கும் சொல்லுகிறான்.
Yea also, when he that is a fool walketh by the way, his wisdom faileth [him], and he saith to every one [that] he [is] a fool.
- 4
அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் உன் ஸ்தானத்தை விட்டு விலகாதே; இணங்குதல் பெரிய குற்றங்களையும் அமர்த்திப்போடும்.
If the spirit of the ruler rise up against thee, leave not thy place; for yielding pacifieth great offences.
- 5
நான் சூரியனுக்குக்கீழே கண்ட ஒருதீங்குண்டு, அது அதிபதியினிடத்தில் தோன்றும் தப்பிதமே.
There is an evil [which] I have seen under the sun, as an error [which] proceedeth from the ruler:
- 6
மூடர் மகா உயர்ந்த நிலையில் வைக்கப்படுகிறார்கள்; சீமான்களோ தாழ்ந்த நிலையில் உட்கார்ந்திருக்கிறார்கள்.
Folly is set in great dignity, and the rich sit in low place.
- 7
வேலைக்காரர் குதிரைகள்மேல் ஏறிப்போகிறதையும், பிரபுக்கள் வேலைக்காரர் போல் தரையிலே நடக்கிறதையும் கண்டேன்.
I have seen servants upon horses, and princes walking as servants upon the earth.
- 8
படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும்.
He that diggeth a pit shall fall into it; and whoso breaketh an hedge, a serpent shall bite him.
- 9
கல்லுகளைப் பேர்க்கிறவன் அவைகளால் காயப்படுவான்; மரத்தைப் பிளக்கிறவன் அதினால் மோசப்படுவான்.
Whoso removeth stones shall be hurt therewith; [and] he that cleaveth wood shall be endangered thereby.
- 10
இருப்பு ஆயுதம் மழுங்கலாயிருக்க, அதை ஒருவன் தீட்டமாற்போனால், அதிகபலத்தைப் பிரயோகம்பண்ணவேண்டியதாகும்; ஆகையால் ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு ஞானமேபிரதானம்.
If the iron be blunt, and he do not whet the edge, then must he put to more strength: but wisdom [is] profitable to direct.
- 11
தடைகட்டப்படாத பாம்பு கடிக்குமே, அலப்புவாயனும் அதற்கு ஒப்பானவன்.
Surely the serpent will bite without enchantment; and a babbler is no better.
- 12
ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும்.
The words of a wise man’s mouth [are] gracious; but the lips of a fool will swallow up himself.
- 13
அவன் வாய்மொழிகளின் துவக்கம் மதியீனமும், அவன் வாக்கின் முடிவு கொடிய பைத்தியமுமாம்.
The beginning of the words of his mouth [is] foolishness: and the end of his talk [is] mischievous madness.
- 14
மூடன் மிகுதியாய்ப் பேசுகிறான், நடக்கப்போகிறது இன்னதென்று மனுஷன் அறியான்; தனக்குப்பிற்பாடு சம்பவிக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்?
A fool also is full of words: a man cannot tell what shall be; and what shall be after him, who can tell him?
- 15
ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியாததினால், அவன் தொல்லை ஒவ்வொருவரையும் இளைக்கப்பண்ணும்.
The labour of the foolish wearieth every one of them, because he knoweth not how to go to the city.
- 16
ராஜா சிறுபிள்ளையுமாய், பிரபுக்கள் அதிகாலமே உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, உனக்கு ஐயோ!
Woe to thee, O land, when thy king [is] a child, and thy princes eat in the morning!
- 17
ராஜா குலமகனுமாய், பிரபுக்கள் வெறிக்க உண்ணாமல் பெலன்கொள்ள ஏற்றவேளையில் உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, நீ பாக்கியமுள்ளது.
Blessed [art] thou, O land, when thy king [is] the son of nobles, and thy princes eat in due season, for strength, and not for drunkenness!
- 18
மிகுந்த சோம்பலினால் மேல்மச்சுப்பழுதாகும்; கைகளின் நெகிழ்வினாலேவீடு ஒழுக்காகும்.
By much slothfulness the building decayeth; and through idleness of the hands the house droppeth through.
- 19
விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சரசம் ஜீவனுள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.
A feast is made for laughter, and wine maketh merry: but money answereth all [things].
- 20
ராஜாவை உன் மனதிலும் நிந்தியாதே, ஐசுவரியவானை உன் படுக்கையிலும் நிந்தியாதே; ஆகாயத்துப்பறவை அந்தச் சத்தத்தைக் கொண்டுபோகும், செட்டைகளுள்ளது அந்தச் செய்தியை அறிவிக்கும்.
Curse not the king, no not in thy thought; and curse not the rich in thy bedchamber: for a bird of the air shall carry the voice, and that which hath wings shall tell the matter.