Jeremiah 41:1 in Tamil
பின்பு ஏழாம் மாதத்திலே ராஜ வம்சத்தில் பிறந்தவனும், எலிசாமாவின் குமாரனாகிய நெத்தானியாவின் மகனுமான இஸ்மவேலும், அவனுடனேகூட ராஜாவின் பிரபுக்களான பத்துப்பேரும் மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வந்து, அங்கே ஏகமாய்ப் போஜனம் பண்ணினார்கள்.
Pinpu aezhaam maathaththilae raaja vamsaththil piranthavanum, elisaamaavin kumaaranaagiya neththaaniyaavin maganumaana ismavaelum, avanudanaegooda raajaavin pirabukkalaana paththuppaerum mispaavukku agikkaamin kumaaranaagiya kethaliyaavinidaththil vanthu, angae aegamaayp pojanam panninaarkal.
Jeremiah 41:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு ஏழாம் மாதத்தில் ராஜவம்சத்தில் பிறந்தவனும், எலிஷாமாவின் மகனாகிய நெத்தானியாவின் மகனுமான இஸ்மவேலும், அவனுடன் ராஜாவின் பிரபுக்களான பத்துப்பேரும் மிஸ்பாவுக்கு அகீக்காமின் மகனாகிய கெதலியாவினிடத்தில் வந்து, அங்கே ஒன்றாக உணவு சாப்பிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- ஏழாம் மாதத்தில் எலிசாமாவின் பேரனும் நெத்தனியாவின் மகனும், அரச குலத்தைச் சேர்ந்தவனும், அரசனின் அதிகாரிகளில் ஒருவனுமாயிருந்த இஸ்மயேல், பத்து மனிதரோடு மிஸ்பாவிலிருந்த அகீக்காமின் மகன் கெதலியாவிடம் வந்தான். அங்கே அவர்கள் எல்லோரும் ஒன்றாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- ஏழாவது மாதத்தில், நெத்தானியாவின் மகனான இஸ்மவேல் அகிக்காமின் மகனான கெதலியாவிடம் வந்தான். (நெத்தானியா எலிசாமாவின் மகன்.) இஸ்மவேல் அவனது பத்து ஆட்களோடு வந்தான். அந்த ஆட்கள் மிஸ்பா பட்டணத்துக்கு வந்தனர். இஸ்மவேல் அரச குடும்பத்தில் ஒரு உறுப்பினன். அவன் யூதா அரசனிடம் ஒரு அதிகாரியாக இருந்தவன். இஸ்மவேலும் அவனது ஆட்களும் கெதலியாவோடு உணவு உண்டனர்.
Jeremiah 41:1 in English
- King James Version (KJV)
- Now it came to pass in the seventh month, [that] Ishmael the son of Nethaniah the son of Elishama, of the seed royal, and the princes of the king, even ten men with him, came unto Gedaliah the son of Ahikam to Mizpah; and there they did eat bread together in Mizpah.
- World English Bible (WEB)
- Now in the seventh month, Ishmael the son of Nethaniah, the son of Elishama, of the royal offspring and one of the chief officers of the king, and ten men with him, came to Gedaliah the son of Ahikam to Mizpah; and there they ate bread together in Mizpah.
- American Standard Version (ASV)
- Now it came to pass in the seventh month, that Ishmael the son of Nethaniah, the son of Elishama, of the seed royal and [one of] the chief officers of the king, and ten men with him, came unto Gedaliah the son of Ahikam to Mizpah; and there they did eat bread together in Mizpah.
- Bible in Basic English (BBE)
- Now it came about in the seventh month that Ishmael, the son of Nethaniah, the son of Elishama, of the king's seed, having with him ten men, came to Gedaliah, the son of Ahikam, in Mizpah; and they had a meal together in Mizpah.
- Darby Translation (DBY)
- And it came to pass in the seventh month, that Ishmael the son of Nethaniah the son of Elishama, of the royal seed, and [one] of the king's chief men, and ten men with him, came to Gedaliah the son of Ahikam unto Mizpah, and there they ate bread together, in Mizpah.
- Webster's Bible (WBS)
- Now it came to pass in the seventh month, [that] Ishmael the son of Nethaniah the son of Elishama, of the seed royal, and the princes of the king, even ten men with him, came to Gedaliah the son of Ahikam to Mizpah; and there they ate bread together in Mizpah.
- Young's Literal Translation (YLT)
- And it cometh to pass, in the seventh month, come hath Ishmael son of Nethaniah, son of Elishama, of the seed royal, and of the chiefs of the king, and ten men with him, unto Gedaliah son of Ahikam, to Mizpah, and they eat there bread together in Mizpah.
Read in context
- 1பின்பு ஏழாம் மாதத்திலே ராஜ வம்சத்தில் பிறந்தவனும், எலிசாமாவின் குமாரனாகிய நெத்தானியாவின் மகனுமான இஸ்மவேலும், அவனுடனேகூட ராஜாவின் பிரபுக்களான பத்துப்பேரும் மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வந்து, அங்கே ஏகமாய்ப் போஜனம் பண்ணினார்கள்.
- 2அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த பத்துப்பேரும் எழும்பி, பாபிலோன் ராஜா தேசத்தின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவைப் பட்டயத்தால் வெட்டினார்கள்.
- 3மிஸ்பாவிலே கெதலியாவினிடத்தில் இருந்த எல்லா யூதரையும், அங்கே காணப்பட்ட யுத்தமனுஷராகிய கல்தேயரையும் இஸ்மவேல் வெட்டிப்போட்டான்.
Cross references
- Jeremiah 40:8 எரேமியா 40:8அவர்கள் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; யாரெனில், நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், கரேயாவின் குமாரராகிய யோகனானும், யோனத்தானும், தன்கூமேத்தின் குமாரனாகிய செராயாவும், நெத்தோபாத்தியனாகிய ஏப்பாயின் குமாரரும், மாகாத்தியனான ஒருவனுடைய குமாரனாகிய யெசனியாவும் ஆகிய இவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களுமே.
- Psalm 41:9 சங்கீதம் 41:9என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.
- Jeremiah 40:6 எரேமியா 40:6அப்படியே எரேமியா மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் போய், தேசத்தில் மீதியான ஜனங்களுக்குள் அவனோடே தங்கியிருந்தான்.
- 2 Samuel 3:27 2 சாமுவேல் 3:27அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடே இரகசியமாய்ப் பேசப்போகிறவன்போல, அவனை ஒலிமுகவாசலின் நடுவே ஒரு பக்கமாய் அழைத்துப்போய், தன் தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க, அங்கே அவனை வயிற்றிலே குத்திக் கொன்றுபோட்டான்.
- 2 Kings 11:1 2 இராஜாக்கள் 11:1அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, எழும்பி ராஜவம்சஸ்தர்யாவரையும் சங்காரம்பண்ணினாள்.
- Proverbs 27:4 நீதிமொழிகள் 27:4உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?
- Proverbs 26:23–26 நீதிமொழிகள் 26:23–26நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப் பூசுசு பூசிய ஓட்டைப்போலிருக்கும். பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூதுபேசுகிறான். அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு. பகையை வஞ்சகமாய் மறைத்துவைக்கிறவனெவனோ, அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும்.
- Luke 22:47–48 லூக்கா 22:47–48அவர் அப்படிப் பேசுகையில் ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான். இயேசு அவனை நோக்கி: யூதாசேமுத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக்காட்டிக்கொடுக்கிறாய் என்றார்.
- Jeremiah 36:20 எரேமியா 36:20சுருளைச் சம்பிரதியாகிய எலிசாமாவின் அறையிலே வைத்து, ராஜாவினிடத்துக்கு அரமனையிலே போய், ராஜாவின் செவிகளுக்கு இந்த வார்த்தைகளையெல்லாம் அறிவித்தார்கள்.
- John 13:18 யோவான் 13:18உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.
- Ezekiel 17:13 எசேக்கியேல் 17:13அவன் ராஜவம்சத்திலே ஒருவனைத் தெரிந்தெடுத்து, அவனோடே உடன்படிக்கைபண்ணி,
- Psalm 109:5 சங்கீதம் 109:5நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், என் சிநேகத்துக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள்.
Original words (Hebrew)
- seventh · H7637שְׁבִיעִי shᵉbîyʻîy
- month · H2320חֹדֶשׁ chôdesh
- Ishmael · H3458יִשְׁמָעֵאל Yishmâʻêʼl
- son · H1121בֵּן bên
- Nethaniah · H5418נְתַנְיָה Nᵉthanyâh
- son · H1121בֵּן bên
- Elishama · H476אֱלִישָׁמָע ʼĔlîyshâmâʻ
- seed · H2233זֶרַע zeraʻ
- royal · H4410מְלוּכָה mᵉlûwkâh
- princes · H7227רַב rab
- king · H4428מֶלֶךְ melek
- ten · H6235עֶשֶׂר ʻeser
- men · H582אֱנוֹשׁ ʼĕnôwsh
- came · H935בּוֹא bôwʼ
- Gedaliah · H1436גְּדַּלְיָה Gᵉdalyâh
- son · H1121בֵּן bên
- Ahikam · H296אֲחִיקָם ʼĂchîyqâm
- Mizpah · H4709מִצְפָּה Mitspâh
- eat · H398אָכַל ʼâkal
- bread · H3899לֶחֶם lechem
- together · H3162יַחַד yachad
- Mizpah · H4708מִצְפֶּה Mitspeh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.