Job 16:3 in Tamil
காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? இப்படி நீ உத்தரவுசொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன?
Kaatraippondra vaarththaigalukku mudiviraatho? ippadi nee uththaravusolla unakkuth thunivu undaanathenna?
Job 16:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? இப்படி நீ பதில்சொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன?
- Open Tamil Contemporary Version
- காற்றைப்போன்ற உங்கள் வீண் வார்த்தைகளுக்கு முடிவே இல்லையா? உங்களை இப்படித் தொடர்ந்து பேசவைப்பது என்ன?
- Tamil Easy Reading Version
- உங்கள் நீண்ட பேச்சுகளுக்கு முடிவேயில்லை! ஏன் தொடர்ந்து விவாதிக்கிறீர்கள்?
Job 16:3 in English
- King James Version (KJV)
- Shall vain words have an end? or what emboldeneth thee that thou answerest?
- World English Bible (WEB)
- Shall vain words have an end? Or what provokes you that you answer?
- American Standard Version (ASV)
- Shall vain words have an end? Or what provoketh thee that thou answerest?
- Bible in Basic English (BBE)
- May words which are like the wind be stopped? or what is troubling you to make answer to them?
- Darby Translation (DBY)
- Shall words of wind have an end? or what provoketh thee that thou answerest?
- Webster's Bible (WBS)
- Shall vain words have an end? or what emboldeneth thee that thou answerest?
- Young's Literal Translation (YLT)
- Is there an end to words of wind? Or what doth embolden thee that thou answerest?
Read in context
- 1அதற்கு யோபு பிரதியுத்தரமாக:
- 2இப்படிப்பட்ட அநேகங் காரியங்களை நான் கேட்டிருக்கிறேன்; நீங்கள் எல்லாரும் அலட்டுண்டாக்குகிற தேற்றரவாளர்.
- 3காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? இப்படி நீ உத்தரவுசொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன?
- 4உங்களைப்போல நானும் பேசக்கூடும்; நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால், நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோத்து, உங்களுக்கு எதிரே என் தலையைத் துலுக்கவுங்கூடும்.
- 5ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்குத் திடன்சொல்லுவேன், என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும்.
Cross references
- Job 6:26 யோபு 6:26கடிந்து கொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து, நம்பிக்கையற்றவனுடைய வார்த்தைகளைக் காற்றிலே விட்டுவிடுகிறீர்களோ?
- Job 15:2 யோபு 15:2ஞானவான் காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லி, தன் வயிற்றைக் கொண்டல்காற்றினால் நிரப்பி,
- Job 8:2 யோபு 8:2நீர் எந்தமட்டும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? எதுவரைக்கும் உம்முடைய வாயின் வார்த்தைகள் பலமான காற்றைப்போலிருக்கும்?
- Titus 2:8 தீத்து 2:8எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக.
- Matthew 22:46 மத்தேயு 22:46அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக் கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.
- Job 32:3–6 யோபு 32:3–6கொடுக்கத்தக்க மறுமொழி யோபின் மூன்று சிநேகிதருக்கும் அகப்படாதிருந்தும், அவர்கள் அவனை ஆகாதவனென்று தீர்த்ததினிமித்தம், அவர்கள்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது. அவர்கள் தன்னைப்பார்க்கிலும் வயதுசென்றவர்களானபடியினால், எலிகூ யோபின் வார்த்தைகள் முடிந்து தீருமட்டும் காத்திருந்தான். அந்த மூன்று மனுஷரின் வாயிலும் மறுஉத்தரவு பிறக்கவில்லையென்று எலிகூ கண்டபோது, அவனுக்குக் கோபம்மூண்டது. ஆதலால் பரகெயேலின் குமாரன் எலிகூ என்னும் பூசியன் பிரதியுத்தரமாக: நான் இளவயதுள்ளவன், நீங்களோ விருத்தாப்பியர்; ஆகையால் நான் அஞ்சி, என் அபிப்பிராயத்தை உங்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப் பயந்திருந்தேன்.
- Titus 1:11 தீத்து 1:11அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
- Job 20:3 யோபு 20:3நிந்தித்தேன் என்று நான் கடிந்து கொள்ளப்பட்டதைக் கேட்டேன்; ஆனாலும் உணர்வினால் என் ஆவி பிரதியுத்தரம் சொல்ல என்னை ஏவுகிறது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.