Job 35:9 in Tamil
அநேகரால் பலவந்தமாய் ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு, வல்லவர்களுடைய புயத்தினிமித்தம் அலறுகிறார்கள்.
Anaegaraal palavanthamaay odukkappattavarkal muraiyittu, vallavarkaludaiya puyaththinimiththam alarugiraarkal.
Job 35:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அநேகரால் பலவந்தமாக ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு, வல்லவர்களுடைய புயத்தினிமித்தம் அலறுகிறார்கள்.
- Open Tamil Contemporary Version
- “ஒடுக்குதலின் மிகுதியால் மனிதர் கதறுகிறார்கள்; பலவானின் கரத்திலிருந்து விடுதலைக்காக கதறுகிறார்கள்.
- Tamil Easy Reading Version
- “தீயோர் துன்புறுத்தப்பட்டால், அவர்கள் உதவிக்காக கூக்குரலிடுவார்கள். அவர்கள் வல்லமையுள்ள ஜனங்களிடம் சென்று உதவிக்காக கெஞ்சி கேட்பார்கள்.
Job 35:9 in English
- King James Version (KJV)
- By reason of the multitude of oppressions they make [the oppressed] to cry: they cry out by reason of the arm of the mighty.
- World English Bible (WEB)
- “By reason of the multitude of oppressions they cry out. They cry for help by reason of the arm of the mighty.
- American Standard Version (ASV)
- By reason of the multitude of oppressions they cry out; They cry for help by reason of the arm of the mighty.
- Bible in Basic English (BBE)
- Because the hand of the cruel is hard on them, men are making sounds of grief; they are crying out for help because of the arm of the strong.
- Darby Translation (DBY)
- By reason of the multitude of oppressions they cry; they cry out by reason of the arm of the mighty:
- Webster's Bible (WBS)
- By reason of the multitude of oppressions they make [the oppressed] to cry: they cry out by reason of the arm of the mighty.
- Young's Literal Translation (YLT)
- Because of the multitude of oppressions They cause to cry out, They cry because of the arm of the mighty.
Read in context
- 7நீர் நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும்? அல்லது அவர் உம்முடைய கையில் என்ன லாபத்தைப் பெறுவார்?
- 8உம்முடைய பாவத்தினால் உம்மைப் போன்ற மனுஷனுக்கு நஷ்டமும், உம்முடைய நீதியினால் மனுபுத்திரனுக்குலாபமும் உண்டாகும்.
- 9அநேகரால் பலவந்தமாய் ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு, வல்லவர்களுடைய புயத்தினிமித்தம் அலறுகிறார்கள்.
- 10பூமியின் மிருகங்களைப்பார்க்கிலும் எங்களைப் புத்திமான்களும், ஆகாசத்துப் பறவைகளைப்பார்க்கிலும் எங்களை ஞானவான்களுமாக்கி,
- 11என்னை உண்டாக்கினவரும், இரவிலும் கீதம்பாட அருள்செய்கிறவருமாகிய என் சிருஷ்டிகர்த்தாவாகிய தேவன் எங்கே என்று கேட்பவன் ஒருவனுமில்லை.
Cross references
- Exodus 2:23 யாத்திராகமம் 2:23சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.
- Job 34:28 யோபு 34:28எல்லாரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார்.
- Job 12:19 யோபு 12:19அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக்கொண்டுபோய், பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார்.
- Nehemiah 5:1–5 நெகேமியா 5:1–5ஜனங்களுக்குள் அநேகரும் அவர்களுடைய ஸ்திரீகளும் யூதராகிய தங்கள் சகோதரர்மேல் முறையிடுகிற பெரிய கூக்குரலுண்டாயிற்று. அதென்னவென்றால், அவர்களில் சிலர்: நாங்கள் எங்கள் குமாரரோடும் எங்கள் குமாரத்திகளோடும் அநேகரானபடியினால், சாப்பிட்டுப் பிழைக்கும்படிக்கு நாங்கள் தானியத்தைக் கடனாக வாங்கினோம் என்றார்கள். வேறு சிலர்: எங்கள் நிலங்களையும் எங்கள் திராட்சத்தோட்டங்களையும் எங்கள் வீடுகளையும் நாங்கள் அடைமானமாக வைத்து, இந்தப் பஞ்சத்திலே தானியம் வாங்கினோம் என்றார்கள். இன்னும் சிலர்: ராஜாவுக்குத் தீர்வைசெலுத்த, நாங்கள் எங்கள் நிலங்கள்மேலும் எங்கள் திராட்சத்தோட்டங்கள்மேலும், பணத்தைக் கடனாக வாங்கினோம் என்றும்; எங்கள் உடலும் எங்கள் சகோதரர் உடலும் சரி; எங்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளும் சரி; ஆனாலும், இதோ, நாங்கள் எங்கள் குமாரரையும் எங்கள் குமாரத்திகளையும் அடிமைத்தனத்திற்கு உட்படுத்தவேண்டியதாயிருக்கிறது; அப்படியே எங்கள் குமாரத்திகளில் சிலர் அடிமைப்பட்டுமிருக்கிறார்கள்; அவர்களை மீட்க எங்களுக்குநிர்வாகமில்லை; எங்கள் நிலங்களும் எங்கள் திராட்சத்தோட்டங்களும்வேறே மனிதர் கைவசமாயிற்று என்றார்கள்.
- Psalm 56:1–2 சங்கீதம் 56:1–2தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான். என் சத்துருக்கள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்; உன்னதமானவரே, எனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர் செய்கிறவர்கள் அநேகர்.
- Psalm 43:2 சங்கீதம் 43:2என் அரணாகிய தேவன் நீர்; ஏன் என்னைத் தள்ளிவிடுகிறீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்?
- Exodus 3:9 யாத்திராகமம் 3:9இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன்.
- Psalm 55:2–3 சங்கீதம் 55:2–3எனக்குச் செவிகொடுத்து, உத்தரவு அருளிச்செய்யும்; சத்துருவினுடைய கூக்குரலினிமித்தமும், துன்மார்க்கர் செய்யும் இடுக்கத்தினிமித்தமும் என் தியானத்தில் முறையிடுகிறேன். அவர்கள் என்மேல் பழிசாட்டி, குரோதங்கொண்டு, என்னைப் பகைக்கிறார்கள்.
- Job 24:12 யோபு 24:12ஊரில் மனுஷர் தவிக்கிறார்கள், குற்றுயிராய்க் கிடக்கிறவர்களின் ஆத்துமா கூப்பிடுகிறது; என்றாலும், தேவன் அதைக் குற்றமாக அவர்கள்மேல் சுமத்துகிறதில்லை.
- Psalm 12:5 சங்கீதம் 12:5ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன்என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- Luke 18:3–7 லூக்கா 18:3–7அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள். வெகுநாள்வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும், இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார். பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள். அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
- Job 40:9 யோபு 40:9தேவனுடைய புயத்தைப்போல் உனக்குப் புயமுண்டோ? அவரைப் போல் இடிமுழக்கமாய்ச் சத்தமிடக்கூடுமோ?
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.