Proverbs 17:21 in Tamil
மூடபுத்திரனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலமுண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.
Moodabuththiranaip perugiravan thanakkus sanjsalamundaaga avanaip perugiraan; mathiyeenanudaiya thagappanukku magizhchiyillai.
Proverbs 17:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மதிகெட்ட மகனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலம் உண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.
- Open Tamil Contemporary Version
- முட்டாளைப் பெற்றவருக்கு வருத்தம்; இறைவனற்ற மதியீனரின் பெற்றோருக்கு மகிழ்ச்சியில்லை.
- Tamil Easy Reading Version
- அறிவற்றவனின் தந்தை மிகவும் சோகம் அடைவான். அறிவற்றவனின் தந்தையால் மகிழ்ச்சியாக இருக்கமுடியாது.
Proverbs 17:21 in English
- King James Version (KJV)
- He that begetteth a fool [doeth it] to his sorrow: and the father of a fool hath no joy.
- World English Bible (WEB)
- He who becomes the father of a fool grieves. The father of a fool has no joy.
- American Standard Version (ASV)
- He that begetteth a fool [doeth it] to his sorrow; And the father of a fool hath no joy.
- Bible in Basic English (BBE)
- He who has an unwise son gets sorrow for himself, and the father of a foolish son has no joy.
- Darby Translation (DBY)
- He that begetteth a fool [doeth it] to his sorrow, and the father of a vile [man] hath no joy.
- Webster's Bible (WBS)
- He that begetteth a fool [doeth it] to his sorrow: and the father of a fool hath no joy.
- Young's Literal Translation (YLT)
- Whoso is begetting a fool hath affliction for it, Yea, the father of a fool rejoiceth not.
Read in context
- 19வாதுப்பிரியன் பாதகப்பிரியன்; தன் வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.
- 20மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டுநாவுள்ளவன் தீமையில் விழுவான்.
- 21மூடபுத்திரனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலமுண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.
- 22மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.
- 23துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட, மடியிலுள்ள பரிதானத்தைவாங்குகிறான்.
Cross references
- Proverbs 10:1 நீதிமொழிகள் 10:1சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.
- Proverbs 19:13 நீதிமொழிகள் 19:13மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.
- 1 Samuel 2:32–35 1 சாமுவேல் 2:32–35இஸ்ரவேலுக்குச் செய்யப்படும் சகல நன்மைக்கும் மாறாக என் வாசஸ்தலத்திலே உபத்திரவத்தைக் காண்பாய்; ஒருபோதும் உன் வீட்டில் ஒரு கிழவனும் இருப்பதில்லை. என் பலிபீடத்தில் சேவிக்க, நான் உன் சந்ததியில் நிர்மூலமாக்காதவர்களோ, உன் கண்களைப் பூத்துப்போகப்பண்ணவும், உன் ஆத்துமாவை வேதனைப்படுத்தவும் வைக்கப்படுவார்கள்; உன் வம்சத்திலுள்ள யாவரும் வாலவயதிலே சாவார்கள். ஓப்னி பினெகாஸ் என்னும் உன் இரண்டு குமாரரின்மேல் வருவதே உனக்கு அடையாளமாயிருக்கும்; அவர்கள் இருவரும் ஒரேநாளில் சாவார்கள். நான் என் உள்ளத்துக்கும் என் சித்தத்துக்கும் ஏற்றபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பப்பண்ணி, அவனுக்கு நிலையான வீட்டைக் கட்டுவேன்; அவன் என்னால் அபிஷேகம்பண்ணப்பட்டவனுக்கு முன்பாகச் சகல நாளும் நடந்துகொள்வான்.
- Proverbs 15:20 நீதிமொழிகள் 15:20ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்.
- Genesis 26:34 ஆதியாகமம் 26:34ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான்.
- Proverbs 17:25 நீதிமொழிகள் 17:25மூடபுத்திரன் தன் பிதாவுக்குச்சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.
- Proverbs 23:15–16 நீதிமொழிகள் 23:15–16என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும். உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என் உள்ளிந்திரியங்கள் மகிழும்.
- 3 John 1:4 3 யோவான் 1:4என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிறசந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.
- Philemon 1:19–20 பிலேமோன் 1:19–20பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். நீர் உம் மைத்தாமே எனக்குக் கடனாகச் செலுத்த வேண்டுமென்று நான் உமக்குச் சொல்லவேண்டியதில்லையே. ஆம், சகோதரனே, கர்த்தருக்குள் உம்மாலே எனக்குப் பிரயோஜனமுண்டாகட்டும்; கர்த்தருக்குள் என் உள்ளத்தை இளைப்பாறப்பண்ணும்.
- 2 Corinthians 2:3 2 கொரிந்தியர் 2:3என்னுடைய சந்தோஷம் உங்களெல்லாருக்கும் சந்தோஷமாயிருக்குமென்று, நான் உங்களெல்லாரையும்பற்றி நம் பிக்கையுள்ளவனாயிருந்து, நான் வரும்போது, என்னைச் சந்தோஷப்படுத்தவேண்டியவர்களால் நான் துக்கமடையாதபடிக்கு, அதை உங்களுக்கு எழுதினேன்.
- 2 Samuel 18:33 2 சாமுவேல் 18:33அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகையில்: என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே நான் உனக்குப்பதிலாகச் செத்தேனானால்நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே என்று சொல்லி அழுதான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.