Proverbs 21:31 in Tamil
குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும; ஜெயமோ கர்த்தரால் வரும்.
Kuthirai yuththanaalukku aayaththamaakkappaduma; jeyamo karththaraal varum.
Proverbs 21:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; வெற்றியோ யெகோவாவால் வரும்.
- Open Tamil Contemporary Version
- போரின் நாளுக்காக குதிரை ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது, ஆனால் வெற்றியோ யெகோவாவினுடையது.
- Tamil Easy Reading Version
- ஜனங்களால் போருக்கான அனைத்து ஏற்பாடுகளையும், குதிரைகளையும்கூடத் தயார் செய்ய முடியும். ஆனால் கர்த்தர் வெற்றியைக் கொடுக்காவிட்டால் அவர்களால் வெல்ல இயலாது.
Proverbs 21:31 in English
- King James Version (KJV)
- The horse [is] prepared against the day of battle: but safety [is] of the LORD.
- World English Bible (WEB)
- The horse is prepared for the day of battle; but victory is with the LORD.
- American Standard Version (ASV)
- The horse is prepared against the day of battle; But victory is of Jehovah.
- Bible in Basic English (BBE)
- The horse is made ready for the day of war, but power to overcome is from the Lord.
- Darby Translation (DBY)
- The horse is prepared for the day of battle; but safety is of Jehovah.
- Webster's Bible (WBS)
- The horse [is] prepared against the day of battle: but safety [is] from the LORD.
- Young's Literal Translation (YLT)
- A horse is prepared for a day of battle, And the deliverance [is] of Jehovah!
Read in context
- 29துன்மார்க்கன் தன் முகத்தைக் கடினப்படுத்துகிறான்; செம்மையானவனோ தன் வழியை நேர்ப்படுத்துகிறான்.
- 30கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.
- 31குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும; ஜெயமோ கர்த்தரால் வரும்.
Cross references
- Psalm 20:7 சங்கீதம் 20:7சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மைபாராட்டுவோம்.
- Isaiah 31:1 ஏசாயா 31:1சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப் போய், குதிரைகள்மேல் நம்பிக்கை வைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!
- Psalm 33:17–18 சங்கீதம் 33:17–18இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது. தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;
- Psalm 147:10 சங்கீதம் 147:10அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார்.
- Psalm 3:3 சங்கீதம் 3:3ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.
- Psalm 68:20 சங்கீதம் 68:20நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார்; ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு.
- Psalm 3:8 சங்கீதம் 3:8இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா.) (நெகினோத்தென்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
- Ecclesiastes 9:11 பிரசங்கி 9:11நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும்போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்குவித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும்.
- Psalm 144:10 சங்கீதம் 144:10நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து, உமதடியானாகிய தாவீதைப் பொல்லாதபட்டயத்திற்குத்தப்புவிக்கிறவர்.
- Jeremiah 3:23 எரேமியா 3:23குன்றுகளையும், திரளான மலைகளையும் நம்புகிறது விருதா என்பது மெய்; இஸ்ரவேலின் இரட்சிப்பு எங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் இருப்பது என்பதுமெய்யே.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.