Proverbs 8:29 in Tamil
சமுத்திர ஜலம் தன் கரையைவிட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களைநிலைப்படுத்துகையிலும்,
Samuththira jalam than karaiyaivittu meeraathabadikku atharku ellaiyaik kattalaiyittu, poomiyin asthibaarangalainilaippaduththugaiyilum,
Proverbs 8:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சமுத்திரத் தண்ணீர் தன்னுடைய கரையைவிட்டு மீறாதபடி அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்தும்போதும்,
- Open Tamil Contemporary Version
- கடலுக்கு எல்லையை அமைத்து, தண்ணீர் அவருடைய கட்டளையை மீறி வெளியேறாதபடி அவர் பூமிக்கு அதின் அஸ்திபாரத்தைக் குறியிட்டபோதும் நான் அங்கேயே இருந்தேன்.
- Tamil Easy Reading Version
- கடல்களில் தண்ணீரின் அளவைக் கர்த்தர் நிர்ணயித்தபோதே நான் அங்கிருந்தேன். தண்ணீரானது கர்த்தருடைய அனுமதியின்றி உயர்ந்திட முடியாது. கர்த்தர் உலகத்தின் அஸ்திபாரத்தை உண்டாக்கிய போது நான் அங்கிருந்தேன்.
Proverbs 8:29 in English
- King James Version (KJV)
- When he gave to the sea his decree, that the waters should not pass his commandment: when he appointed the foundations of the earth:
- World English Bible (WEB)
- when he gave to the sea its boundary, that the waters should not violate his commandment, when he marked out the foundations of the earth,
- American Standard Version (ASV)
- When he gave to the sea its bound, That the waters should not transgress his commandment, When he marked out the foundations of the earth;
- Bible in Basic English (BBE)
- When he put a limit to the sea, so that the waters might not go against his word: when he put in position the bases of the earth:
- Darby Translation (DBY)
- when he imposed on the sea his decree that the waters should not pass his commandment, when he appointed the foundations of the earth:
- Webster's Bible (WBS)
- When he gave to the sea his decree, that the waters should not pass his commandment: when he appointed the foundations of the earth:
- Young's Literal Translation (YLT)
- In His setting for the sea its limit, And the waters transgress not His command, In His decreeing the foundations of earth,
Read in context
- 27அவர் வானங்களைப் படைக்கையில்நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்,
- 28உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்துவைக்கையிலும்,
- 29சமுத்திர ஜலம் தன் கரையைவிட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களைநிலைப்படுத்துகையிலும்,
- 30நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.
- 31அவருடைய புவூலகத்தில் சந்தோஷப்பட்டு, மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தேன்.
Cross references
- Psalm 104:9 சங்கீதம் 104:9அவைகள்திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடவாதிருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர்.
- Jeremiah 5:22 எரேமியா 5:22எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக்கூடாத நித்தியபிரமாணமாகச் சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்கு முன்பாக அதிராதிருப்பீர்களோ?
- Genesis 1:9–10 ஆதியாகமம் 1:9–10பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
- Psalm 33:7 சங்கீதம் 33:7அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்.
- Psalm 104:5 சங்கீதம் 104:5பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதைஸ்தாபித்தார்.
- Job 38:4–11 யோபு 38:4–11நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லைவைத்தவர் யார்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவ புத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே. கர்ப்பத்திலிருந்து உதிக்கிறது போல் சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்? மேகத்தை அதற்கு வஸ்திரமாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும், நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு: இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்?
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.