Psalm 13:5 in Tamil
நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.
Naan ummudaiya kirubaiyinmael nambikkaiyaayirukkiraen; ummudaiya ratchippinaal en iruthayam kaligoorum.
Psalm 13:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாக இருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படும்.
- Open Tamil Contemporary Version
- ஆனால் நானோ, உமது உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறேன்; என் இருதயம் உமது இரட்சிப்பில் மகிழ்கிறது.
- Tamil Easy Reading Version
- கர்த்தாவே, எனக்கு உதவும் உம் அன்பில் நான் நம்பிக்கை வைத்தேன். நீர் என்னைக் காத்து என்னை மகிழச் செய்தீர்.
Psalm 13:5 in English
- King James Version (KJV)
- But I have trusted in thy mercy; my heart shall rejoice in thy salvation.
- World English Bible (WEB)
- But I trust in your loving kindness. My heart rejoices in your salvation.
- American Standard Version (ASV)
- But I have trusted in thy lovingkindness; My heart shall rejoice in thy salvation.
- Bible in Basic English (BBE)
- But I have had faith in your mercy; my heart will be glad in your salvation.
- Darby Translation (DBY)
- As for me, I have confided in thy loving-kindness; my heart shall be joyful in thy salvation.
- Webster's Bible (WBS)
- But I have trusted in thy mercy; my heart shall rejoice in thy salvation.
- Young's Literal Translation (YLT)
- And I, in Thy kindness I have trusted, Rejoice doth my heart in Thy salvation.
Read in context
- 3என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.
- 4அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும்.
- 5நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.
- 6கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன். (இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
Cross references
- Isaiah 12:2 ஏசாயா 12:2இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.
- Jude 1:21 யூதா 1:21தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக் காத்திருங்கள்.
- Habakkuk 3:18 ஆபகூக் 3:18நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
- Psalm 52:8 சங்கீதம் 52:8நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப்போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.
- Psalm 36:7 சங்கீதம் 36:7தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.
- Psalm 119:81 சங்கீதம் 119:81உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடையவசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
- Psalm 9:14 சங்கீதம் 9:14தேவரீர் எனக்கு இரங்கி, என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும்.
- Psalm 33:21–22 சங்கீதம் 33:21–22அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும். கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக. (தாவீது அபிமெலேக்குக்கு முன்பாகவேஷமாறினபோது அவனால் துரத்திவிடப்படுகையில் பாடின சங்கீதம்.)
- Psalm 51:12 சங்கீதம் 51:12உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.
- Psalm 33:18 சங்கீதம் 33:18தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;
- 1 Samuel 2:1 1 சாமுவேல் 2:1அப்பொழுது அன்னாள் ஜெபம்பண்ணி: என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.
- Luke 2:20 லூக்கா 2:20மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல் லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.