Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 130 in Tamil

Present
  1. 1

    கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

    A Song of degrees. Out of the depths have I cried unto thee, O LORD.

  2. 2

    ஆண்டவரே, என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக.

    Lord, hear my voice: let thine ears be attentive to the voice of my supplications.

  3. 3

    கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.

    If thou, LORD, shouldest mark iniquities, O Lord, who shall stand?

  4. 4

    உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.

    But [there is] forgiveness with thee, that thou mayest be feared.

  5. 5

    கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.

    I wait for the LORD, my soul doth wait, and in his word do I hope.

  6. 6

    எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிறஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.

    My soul [waiteth] for the Lord more than they that watch for the morning: [I say, more than] they that watch for the morning.

  7. 7

    இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.

    Let Israel hope in the LORD: for with the LORD [there is] mercy, and with him [is] plenteous redemption.

  8. 8

    அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களினின்றும் மீட்டுக்கொள்வார். (தாவீது பாடின ஆரோகண சங்கீதம்.)

    And he shall redeem Israel from all his iniquities.

All chapters of Psalms · Tamil Bible

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.