Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 26 in Tamil

Present
  1. 1

    கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.

    [A Psalm] of David. Judge me, O LORD; for I have walked in mine integrity: I have trusted also in the LORD; [therefore] I shall not slide.

  2. 2

    கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்.

    Examine me, O LORD, and prove me; try my reins and my heart.

  3. 3

    உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடந்து கொள்ளுகிறேன்.

    For thy lovingkindness [is] before mine eyes: and I have walked in thy truth.

  4. 4

    வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.

    I have not sat with vain persons, neither will I go in with dissemblers.

  5. 5

    பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன்.

    I have hated the congregation of evil doers; and will not sit with the wicked.

  6. 6

    கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தை தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,

    I will wash mine hands in innocency: so will I compass thine altar, O LORD:

  7. 7

    நான் குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.

    That I may publish with the voice of thanksgiving, and tell of all thy wondrous works.

  8. 8

    கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமைதங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன்.

    LORD, I have loved the habitation of thy house, and the place where thine honour dwelleth.

  9. 9

    என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் ஜீவனை இரத்தப்பிரியரோடுங்கூட வாரிக்கொள்ளாதேயும்.

    Gather not my soul with sinners, nor my life with bloody men:

  10. 10

    அவர்கள் கைகளிலே தீவினையிருக்கிறது; அவர்கள் வலதுகை பரிதானங்களால் நிறைந்திருக்கிறது.

    In whose hands [is] mischief, and their right hand is full of bribes.

  11. 11

    நானோ என் உத்தமத்திலே நடப்பேன்; என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாயிரும்.

    But as for me, I will walk in mine integrity: redeem me, and be merciful unto me.

  12. 12

    என் கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; சபைகளிலே நான் கர்த்தரைத் துதிப்பேன். (தாவீதின் சங்கீதம்.)

    My foot standeth in an even place: in the congregations will I bless the LORD.

All chapters of Psalms · Tamil Bible

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.