Psalm 28:1 in Tamil
என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும்; நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.
En kanmalaiyaagiya karththaavae, ummai nokkik kooppidugiraen; neer kaelaathavarpola mavunamaayiraathaeyum; neer mavunamaayirunthaal naan kuzhiyil irangugiravarkalukku oppaavaen.
Psalm 28:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தாவீதின் பாடல். என் கன்மலையாகிய யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேட்காதவர்போல மவுனமாக இருக்கவேண்டாம்; நீர் மவுனமாக இருந்தால் நான் கல்லறையில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.
- Open Tamil Contemporary Version
- தாவீதின் சங்கீதம். யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் என் கன்மலை, எனக்கு செவிகொடாமல் இருக்கவேண்டாம். நீர் மவுனமாகவே இருப்பீரானால், நான் சவக்குழியில் கிடக்கிறவர்களைப் போலாவேன்.
- Tamil Easy Reading Version
- கர்த்தாவே, நீர் என் பாறை. உதவிக்காக உம்மை அழைத்துக்கொண்டிருக்கிறேன். என் ஜெபங்களுக்கு உமது காதுகளை மூடிக்கொள்ளாதிரும். உதவி கேட்கும் என் கூக்குரலுக்கு நீர் பதிலளிக்காதிருந்தால் கல்லறைக்குச் சென்ற பிணத்தைக் காட்டிலும் நான் மேலானவனில்லை என எண்ணுவேன்.
Psalm 28:1 in English
- King James Version (KJV)
- [A Psalm] of David. Unto thee will I cry, O LORD my rock; be not silent to me: lest, [if] thou be silent to me, I become like them that go down into the pit.
- World English Bible (WEB)
- By David. To you, LORD, I call. My rock, don’t be deaf to me, lest, if you are silent to me, I would become like those who go down into the pit.
- American Standard Version (ASV)
- [A Psalm] of David. Unto thee, O Jehovah, will I call: My rock, be not thou deaf unto me; Lest, if thou be silent unto me, I become like them that go down into the pit.
- Bible in Basic English (BBE)
- Of David. My cry goes up to you, O Lord, my Rock; do not keep back your answer from me, so that I may not become like those who go down into the underworld.
- Darby Translation (DBY)
- [A Psalm] of David. Unto thee, Jehovah, do I call; my rock, be not silent unto me, lest, [if] thou keep silence toward me, I become like them that go down into the pit.
- Webster's Bible (WBS)
- [A Psalm] of David. To thee will I cry, O LORD my rock; be not silent to me: lest, [if] thou shouldst be silent to me, I should become like them that go down into the pit.
- Young's Literal Translation (YLT)
- By David. Unto Thee, O Jehovah, I call, My rock, be not silent to me! Lest Thou be silent to me, And I have been compared With those going down to the pit.
Read in context
- 1என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும்; நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.
- 2நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.
- 3அயலானுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்கள் இருதங்களில் பொல்லாப்பை வைத்திருக்கிறதுன்மார்க்கரோடும் அக்கிரமக்காரரோடும் என்னை வாரிக்கொள்ளாதேயும்.
Cross references
- Psalm 143:7 சங்கீதம் 143:7கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்துபோகிறது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறையாதேயும்.
- Psalm 18:2 சங்கீதம் 18:2கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.
- Psalm 88:4–6 சங்கீதம் 88:4–6நான் குழியில் இறங்குகிறவர்களோடு எண்ணப்பட்டு, பெலனற்றமனுஷனைப்போலானேன். மரித்தவர்களில் ஒருவனைப்போல் நெகிழப்பட்டிருக்கிறேன்; நீர் இனி ஒருபோதும் நினையாதபடி, உமது கையால் அறுப்புண்டுபோய்ப் பிரேதக் குழிகளிலே கிடக்கிறவர்களைப்போலானேன். என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர்.
- Proverbs 1:12 நீதிமொழிகள் 1:12பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையும் விழுங்குவோம்;
- Psalm 83:1 சங்கீதம் 83:1தேவனே, மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே, சும்மாயிராதேயும்.
- Isaiah 26:4 ஏசாயா 26:4கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.
- Revelation 20:3 வெளிப்படுத்தின விசேஷம் 20:3அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்.
- Job 33:28 யோபு 33:28என் ஆத்துமா படுகுழியில் இறங்காதபடி, அவர் அதை இரட்சிப்பார்; ஆகையால் என் பிராணன் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான்.
- Isaiah 38:18 ஏசாயா 38:18பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தைத் தியானிப்பதில்லை.
- Psalm 30:9 சங்கீதம் 30:9கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் என்று சொல்லி;
- Psalm 22:2 சங்கீதம் 22:2என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை.
- Psalm 35:22 சங்கீதம் 35:22கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாயிராதேயும்; ஆண்டவரே, எனக்குத் தூரமாகாதேயும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.