Psalm 31:7 in Tamil
உமது கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்துமவியாகுலங்களை அறிந்திருக்கிறீர்.
Umathu kirubaiyilae kaligoornthu magizhuvaen; neer en ubaththiravaththaip paarththu, en aaththumaviyaagulangalai arinthirukkireer.
Psalm 31:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உமது, கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்தும துயரங்களை அறிந்திருக்கிறீர்.
- Open Tamil Contemporary Version
- நான் உமது அன்பில் மகிழ்ந்து களிகூருவேன்; ஏனெனில், நீர் என் வேதனையைக் கண்டு, என் ஆத்தும துயரத்தை அறிந்திருக்கிறீர்.
- Tamil Easy Reading Version
- தேவனே, உமது தயவு எனக்கு மிகுந்த களிப்பூட்டுகிறது. நீர் எனது தொல்லைகளைக் கண்டுள்ளீர். என் தொல்லைகளை நீர் அறிகிறீர்.
Psalm 31:7 in English
- King James Version (KJV)
- I will be glad and rejoice in thy mercy: for thou hast considered my trouble; thou hast known my soul in adversities;
- World English Bible (WEB)
- I will be glad and rejoice in your loving kindness, for you have seen my affliction. You have known my soul in adversities.
- American Standard Version (ASV)
- I will be glad and rejoice in thy lovingkindness; For thou hast seen my affliction: Thou hast known my soul in adversities;
- Bible in Basic English (BBE)
- I will be glad and have delight in your mercy; because you have seen my trouble; you have had pity on my soul in its sorrows;
- Darby Translation (DBY)
- I will be glad and rejoice in thy loving-kindness, for thou hast seen mine affliction; thou hast known the troubles of my soul,
- Webster's Bible (WBS)
- I will be glad and rejoice in thy mercy: for thou hast considered my trouble; thou hast known my soul in adversities;
- Young's Literal Translation (YLT)
- I rejoice, and am glad in Thy kindness, In that Thou hast seen mine affliction, Thou hast known in adversities my soul.
Read in context
- 5உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.
- 6வீண்மாயைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன்.
- 7உமது கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்துமவியாகுலங்களை அறிந்திருக்கிறீர்.
- 8சத்துருவின் கையில் என்னை ஒப்புக்கொடாமல், என் பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர்.
- 9எனக்கு இரங்கும் கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன்; துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங்கூடக் கருகிப்போயிற்று.
Cross references
- Isaiah 49:13 ஏசாயா 49:13வானங்களே, கெம்பீரித்துப் பாடுங்கள்; பூமியே, களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள்மேல் இரக்கமாயிருப்பார்.
- Isaiah 63:9 ஏசாயா 63:9அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார்; அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வ நாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்துவந்தார்.
- Psalm 119:153 சங்கீதம் 119:153என் உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்; உமது வேதத்தை மறவேன்.
- 2 Timothy 2:19 2 தீமோத்தேயு 2:19ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது.
- Galatians 4:9 கலாத்தியர் 4:9இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க, அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி?
- Isaiah 63:16 ஏசாயா 63:16தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்; ஆபிரகாம் எங்களை அறியான், இஸ்ரவேலுக்கு நாங்கள் அறியப்பட்டவர்களுமல்ல; கர்த்தாவே, நீர் எங்கள் பிதாவும், எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்; இது பூர்வகாலமுதல் உம்முடைய நாமம்.
- John 10:27–30 யோவான் 10:27–30என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
- Isaiah 43:2 ஏசாயா 43:2நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.
- Lamentations 3:50 புலம்பல் 3:50என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது.
- Psalm 142:3 சங்கீதம் 142:3என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்; நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள்.
- Job 23:10 யோபு 23:10ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.
- Psalm 71:20 சங்கீதம் 71:20அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.