Psalm 8:3 in Tamil
உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,
Umathu viralkalin kiriyaiyaagiya ummudaiya vaanangalaiyum, neer sthaabiththa santhiranaiyum natchaththirangalaiyum naan paarkkumbothu,
Psalm 8:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உமது விரல்களின் செயல்களாகிய உம்முடைய வானங்களையும், நீர் அமைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,
- Open Tamil Contemporary Version
- உமது விரல்களின் வேலைப்பாடான வானங்களையும் அவற்றில் நீர் பதித்து வைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் பற்றி நான் சிந்திக்கும்போது,
- Tamil Easy Reading Version
- கர்த்தாவே, உமது கைகளால் நீர் செய்த வானங்களை நான் கண்டேன். நீர் படைத்த நிலாவையும், நட்சத்திரங்களையும் நான் கண்டு ஆச்சரியமடைந்தேன்.
Psalm 8:3 in English
- King James Version (KJV)
- When I consider thy heavens, the work of thy fingers, the moon and the stars, which thou hast ordained;
- World English Bible (WEB)
- When I consider your heavens, the work of your fingers, the moon and the stars, which you have ordained,
- American Standard Version (ASV)
- When I consider thy heavens, the work of thy fingers, The moon and the stars, which thou hast ordained;
- Bible in Basic English (BBE)
- When I see your heavens, the work of your fingers, the moon and the stars, which you have put in their places;
- Darby Translation (DBY)
- When I see thy heavens, the work of thy fingers, the moon and stars, which thou hast established;
- Webster's Bible (WBS)
- When I consider thy heavens, the work of thy fingers; the moon and the stars, which thou hast ordained;
- Young's Literal Translation (YLT)
- For I see Thy heavens, a work of Thy fingers, Moon and stars that Thou didst establish.
Read in context
- 1எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.
- 2பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடையசத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.
- 3உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,
- 4மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.
- 5நீர் அவனைத் தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.
Cross references
- Genesis 1:1 ஆதியாகமம் 1:1ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
- Psalm 33:6 சங்கீதம் 33:6கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.
- Psalm 104:19 சங்கீதம் 104:19சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; சூரியன் தன் அஸ்தமனத்தை அறியும்.
- Psalm 111:2 சங்கீதம் 111:2கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது.
- Psalm 89:11 சங்கீதம் 89:11வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்.
- Romans 1:20 ரோமர் 1:20எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.
- Exodus 8:19 யாத்திராகமம் 8:19அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும் கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற்போனான்.
- Luke 11:20 லூக்கா 11:20நான் தேவனுடைய விரலினாலேபிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.
- Psalm 136:7–9 சங்கீதம் 136:7–9பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது; பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;
- Deuteronomy 4:19 உபாகமம் 4:19உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.
- Job 22:12 யோபு 22:12தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.
- Exodus 31:18 யாத்திராகமம் 31:18சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.