Psalm 87:1 in Tamil
அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது.
Avar asthibaaram parisuththa parvathangalil irukkirathu.
Psalm 87:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கோராகின் மகன்களுடைய பாடல். அவர் அஸ்திபாரம் பரிசுத்த மலைகளில் இருக்கிறது.
- Open Tamil Contemporary Version
- கோராகின் மகன்களின் பாட்டாகிய சங்கீதம். யெகோவா தமது அஸ்திபாரத்தைப் பரிசுத்த மலையில் அமைத்திருக்கிறார்.
- Tamil Easy Reading Version
- எருசலேமின் பரிசுத்த மலைகளில் தேவன் தமது ஆலயத்தைக் கட்டினார்.
Psalm 87:1 in English
- King James Version (KJV)
- A Psalm [or] Song for the sons of Korah. His foundation [is] in the holy mountains.
- World English Bible (WEB)
- A Psalm by the sons of Korah; a Song. His foundation is in the holy mountains.
- American Standard Version (ASV)
- A Psalm of the sons of Korah; a Song. His foundation is in the holy mountains.
- Bible in Basic English (BBE)
- Of the sons of Korah. A Psalm. A Song. This house is resting on the holy mountain.
- Darby Translation (DBY)
- Of the sons of Korah. A Psalm. A Song. His foundation is in the mountains of holiness.
- Webster's Bible (WBS)
- A Psalm [or] Song for the sons of Korah. His foundation [is] in the holy mountains.
- Young's Literal Translation (YLT)
- By sons of Korah. — A Psalm, a song. His foundation [is] in holy mountains.
Read in context
- 1அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது.
- 2கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும்சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்.
- 3தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும்.(சேலா.)
Cross references
- Isaiah 28:16 ஏசாயா 28:16ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான்.
- Isaiah 56:7 ஏசாயா 56:7நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.
- Ephesians 2:20–22 எபேசியர் 2:20–22அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமேமூலைக்கல்லாயிருக்கிறார்; அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது; அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
- Isaiah 2:2–3 ஏசாயா 2:2–3கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.
- Matthew 16:18 மத்தேயு 16:18மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
- Zechariah 8:3 சகரியா 8:3நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேமின் நடுவிலே வாசம்பண்ணுவேன்; எருசலேம் சத்திய நகரம் என்றும், சேனைகளுடைய கர்த்தரின் பர்வதம் பரிசுத்த பர்வதம் என்றும் அழைக்கப்படும்என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- Psalm 48:1–2 சங்கீதம் 48:1–2கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர். வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வ பூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்.
- 1 Corinthians 3:10–11 1 கொரிந்தியர் 3:10–11எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன். போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.
- Psalm 68:16 சங்கீதம் 68:16உயர்ந்த சிகரமுள்ள பர்வதங்களே, ஏன் துள்ளுகிறீர்கள்; இந்தப் பர்வதத்தில் வாசமாயிருக்க தேவன் விரும்பினார்; ஆம், கர்த்தர் இதிலே என்றென்றைக்கும் வாசமாயிருப்பார்.
- 2 Chronicles 3:1 2 நாளாகமம் 3:1பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையில் எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த ஸ்தலத்திலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத் துவக்கினான்.
- Psalm 121:1 சங்கீதம் 121:1எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.
- 2 Peter 1:18 2 பேதுரு 1:18அவரோடேகூட நாங்கள் பரிசுத்தபருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.