Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Song of Solomon 1 in Tamil

Present
  1. 1

    சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு.

    The song of songs, which [is] Solomon’s.

  2. 2

    அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது.

    Let him kiss me with the kisses of his mouth: for thy love [is] better than wine.

  3. 3

    உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.

    Because of the savour of thy good ointments thy name [is as] ointment poured forth, therefore do the virgins love thee.

  4. 4

    என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டுவந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப்பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.

    Draw me, we will run after thee: the king hath brought me into his chambers: we will be glad and rejoice in thee, we will remember thy love more than wine: the upright love thee.

  5. 5

    எருசலேமின்குமாரத்திகளே! கேதாரின் கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும் நான் கறுப்பாயிருந்தாலும், அழகாயிருக்கிறேன்.

    I [am] black, but comely, O ye daughters of Jerusalem, as the tents of Kedar, as the curtains of Solomon.

  6. 6

    நான் கறுப்பாயிருக்கிறேன் என்றுபாராதேயுங்கள்; வெய்யில் என்மேற்பட்டது; என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து, என்னைத் திராட்சத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை.

    Look not upon me, because I [am] black, because the sun hath looked upon me: my mother’s children were angry with me; they made me the keeper of the vineyards; [but] mine own vineyard have I not kept.

  7. 7

    என் ஆத்ம நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்துதிரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன?

    Tell me, O thou whom my soul loveth, where thou feedest, where thou makest [thy flock] to rest at noon: for why should I be as one that turneth aside by the flocks of thy companions?

  8. 8

    ஸ்திரீகளில் ரூபவதியே! அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.

    If thou know not, O thou fairest among women, go thy way forth by the footsteps of the flock, and feed thy kids beside the shepherds’ tents.

  9. 9

    என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூண்டிருக்கிற பரிகள்பவுஞ்சுக்கு உன்னை ஒப்பிடுகிறேன்.

    I have compared thee, O my love, to a company of horses in Pharaoh’s chariots.

  10. 10

    ஆபரணாதிகள் பூண்ட உன் கன்னங்களும், ஆரங்கள் பூண்ட உன் கழுத்தும் அழகாயிருக்கிறது.

    Thy cheeks are comely with rows [of jewels], thy neck with chains [of gold].

  11. 11

    வெள்ளிப்பொட்டுகளுள்ளபொன் ஆபரணங்களை உனக்குப் பண்ணுவோம்.

    We will make thee borders of gold with studs of silver.

  12. 12

    ராஜா தமது பந்தியிலிருக்குந்தனையும் என்னுடைய நளததைலம்தன் வாசனையை வீசும்.

    While the king [sitteth] at his table, my spikenard sendeth forth the smell thereof.

  13. 13

    என் நேசர் எனக்கு என் ஸ்தனங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு.

    A bundle of myrrh [is] my wellbeloved unto me; he shall lie all night betwixt my breasts.

  14. 14

    என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சத்தோட்டங்களில் முளைக்கும் மருதோன்றிப் பூங்கொத்து.

    My beloved [is] unto me [as] a cluster of camphire in the vineyards of En-gedi.

  15. 15

    என் பிரியமே! நீ ரூபவதி; நீ ரூபவதி; உன் கண்கள் புறாக்கண்கள்.

    Behold, thou [art] fair, my love; behold, thou [art] fair; thou [hast] doves’ eyes.

  16. 16

    நீர் ரூபமுள்ளவர்; என் நேசரே! நீர் இன்பமானவர்; நம்முடைய மஞ்சம்பசுமையானது.

    Behold, thou [art] fair, my beloved, yea, pleasant: also our bed [is] green.

  17. 17

    நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுருமரம், நம்முடைய மச்சுதேவதாருமரம்.

    The beams of our house [are] cedar, [and] our rafters of fir.

All chapters of Song of Solomon · Tamil Bible

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.