Song of Solomon 1:15 in Tamil
என் பிரியமே! நீ ரூபவதி; நீ ரூபவதி; உன் கண்கள் புறாக்கண்கள்.
En piriyamae! nee roobavathi; nee roobavathi; un kangal puraakkangal.
Song of Solomon 1:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்; நீ மிக அழகுள்ளவள்; உன் கண்கள் புறாக்கண்கள். மணவாளி
- Open Tamil Contemporary Version
- என் அன்பே, நீ எவ்வளவு அழகானவள்! ஆ, நீ எவ்வளவு அழகானவள்! உன் கண்கள் புறாக்கண்கள்.
- Tamil Easy Reading Version
- என் அன்பே, நீ மிகவும் அழகானவள். ஓ...நீ மிக அழகானவள் உனது கண்கள் புறாக்களின் கண்களைப் போன்றவை.
Song of Solomon 1:15 in English
- King James Version (KJV)
- Behold, thou [art] fair, my love; behold, thou [art] fair; thou [hast] doves’ eyes.
- World English Bible (WEB)
- Behold, you are beautiful, my love. Behold, you are beautiful. Your eyes are like doves.
- American Standard Version (ASV)
- Behold, thou art fair, my love; Behold thou art fair; Thine eyes are [as] doves.
- Bible in Basic English (BBE)
- See, you are fair, my love, you are fair; you have the eyes of a dove.
- Darby Translation (DBY)
- Behold, thou art fair, my love; Behold, thou art fair: thine eyes are doves.
- Webster's Bible (WBS)
- Behold, thou [art] fair, my love; behold, thou [art] fair; thou [hast] doves' eyes.
- Young's Literal Translation (YLT)
- Lo, thou [art] fair, my friend, Lo, thou [art] fair, thine eyes [are] doves!
Read in context
- 13என் நேசர் எனக்கு என் ஸ்தனங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு.
- 14என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சத்தோட்டங்களில் முளைக்கும் மருதோன்றிப் பூங்கொத்து.
- 15என் பிரியமே! நீ ரூபவதி; நீ ரூபவதி; உன் கண்கள் புறாக்கண்கள்.
- 16நீர் ரூபமுள்ளவர்; என் நேசரே! நீர் இன்பமானவர்; நம்முடைய மஞ்சம்பசுமையானது.
- 17நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுருமரம், நம்முடைய மச்சுதேவதாருமரம்.
Cross references
- Song of Solomon 4:1 உன்னதப்பாட்டு 4:1நீ ரூபவதி, என் பிரியமே! நீ ரூபவதி; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களாயிருக்கிறது; உன் கூந்தல் கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது.
- Song of Solomon 5:12 உன்னதப்பாட்டு 5:12அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.
- Song of Solomon 4:7 உன்னதப்பாட்டு 4:7என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை.
- 2 Corinthians 11:2–3 2 கொரிந்தியர் 11:2–3நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியமானவைராக்கியங்கொண்டிருக்கிறேன். ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது போல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படிகெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.
- Ephesians 1:17–18 எபேசியர் 1:17–18நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;
- Song of Solomon 2:13 உன்னதப்பாட்டு 2:13அத்திமரம்காய்காய்த்தது; திராட்சக்கொடிகள் பபூபூத்து வாசனையும் பரிமளிக்கிறது; என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்துவா.
- Song of Solomon 2:10 உன்னதப்பாட்டு 2:10என் நேசர் என்னோடே பேசி: என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்துவா.
- Song of Solomon 4:10 உன்னதப்பாட்டு 4:10உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சரசத்தைப் பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவுமதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமளதைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!
- Song of Solomon 6:4 உன்னதப்பாட்டு 6:4என் பிரியமே! நீ திர்சாவைப்போல் செளந்தரியமும், எருசலேமைப்போல் வடிவமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமானவள்.
- Song of Solomon 1:8 உன்னதப்பாட்டு 1:8ஸ்திரீகளில் ரூபவதியே! அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.
- Song of Solomon 5:2 உன்னதப்பாட்டு 5:2நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.
- Song of Solomon 7:6 உன்னதப்பாட்டு 7:6மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே! நீ எவ்வளவு ரூபவதி, நீ எவ்வளவு இன்பமுள்ளவள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.