Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aaviyai Arulumean Swamy Lyricsஆவியை அருளுமேன் சுவாமி

Artist to be confirmedHoly SpiritWorship

Aaviyai Arulumean Swamy Lyrics in Tamil & English

Chorus

ஆவியை அருளுமேன் சுவாமி – எனக்காய்

உயிர் கொடுத்த வானத்தின் அரசே!

சரணங்கள்

Aaviyai arulumaen suvaami – enakkaay

Uyir koduththa vaanaththin arasae!

Saranangal

Verse 1

உலகத்தை விட்டு இரட்சிக்கும் ஆவி,

ஊமையர் வாய்களைத் திறந்திடும் ஆவி,

பரிசுத்தவான்களில் வசித்திடும் ஆவி,

பாவிகளைச் சிறை மீட்டிடும் ஆவி

Ulagaththai vittu ratchikkum aavi,

Oomaiyar vaaykalaith thiranthidum aavi,

Parisuththavaangalil vasiththidum aavi,

Paavigalais sirai meettidum aavi

Verse 2

பாவியை நினைத்து நீர் உருகின ஆவி

பரத்தை விட்டுப் புவியில் வரச் செய்த ஆவி,

ஆவலாய் அடியேனைத் தேடின ஆவி,

ஆனந்தக் களிப்பை அளித்திட்ட ஆவி

Paaviyai ninaiththu neer urugina aavi

Paraththai vittup puviyil varas seytha aavi,

Aavalaay adiyaenaith thaedina aavi,

Aananthak kalippai aliththitta aavi

Verse 3

பெந்தெகொஸ்தெனும் நாளில் பொழிந்திட்ட ஆவி,

பக்தர்க்குப் புதுப் பெலன் அளித்திட்ட ஆவி,

கல்வாரிப் பாதையில் நடத்திடும் ஆவி,

கர்த்தரே! உம் சித்தம் செய்திடும் ஆவி

Penthegosthenum naalil pozhinthitta aavi,

Paktharkkup puthup pelan aliththitta aavi,

Kalvaarip paathaiyil nadaththidum aavi,

Karththarae! um siththam seythidum aavi

Verse 4

பாவத்தை தேவரீர் காண்பதைப் போல,

பரமனே! அடியேனும் தானாகக் காண

தேவ வரமதனை அளித்திடும் ஐயா!

தெளிவுடன் அதை நான் பாவிக்குக் கூற

Paavaththai thaevareer kaanpathaip pola,

Paramanae! adiyaenum thaanaagak kaana

Thaeva varamathanai aliththidum aiyaa!

Thelivudan athai naan paavikkuk koora

Verse 5

உலகத்தார் மாண்டு போகிறார் சுவாமி!

உன்னத ஆவி வேண்டுமென் சுவாமி;

மலர்ந்தெங்கள் முகங்களை நோக்குமேன் ஐயா

மழைபோல் ஆவியை வருஷியும் ஐயா!

Ulagaththaar maandu pogiraar suvaami!

Unnatha aavi vaendumen suvaami;

Malarnthengal mugangalai nokkumaen aiyaa

Mazhaibol aaviyai varushiyum aiyaa!

Aaviyai Arulumean Swamy PPT – PowerPoint Slides

Download ஆவியை அருளுமேன் சுவாமி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A