Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Asaathiyangal saathiyame Lyricsஅசாத்தியங்கள் சாத்தியமே

John JebarajFaithPraise

Asaathiyangal saathiyame Lyrics in Tamil & English

Verse 1

அசாத்தியங்கள் சாத்தியமே

தேவா உந்தன் வார்த்தையாலே (×2)

அசையாத மலை கூட அசைந்திடுமே

அமராத புயல் கூட அமர்ந்திடுமே (×2)

Asaathiyangal saathiyame

Devaa Unga Vaarthayaalae (×2)

Asayaadha Malaikooda Asaindhidumae

Amaraadha Puyalkooda Amarndhidumae (×2)

Chorus

எல்லா புகழும் எல்லா கனமும்

என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே

எல்லா துதியும் எல்லா உயர்வும்

என்னில் நிலைவரமானவர்க்கே

எனக்காய் நிற்கும் இயேசுவுக்கே

எனக்காய் பேசும் இயேசுவுக்கே (×2)

Ella Pugazhum Ella Ganamum

Ennil Asaathiyam Seibavarkae

Ella Thudhiyum Ella Uyarvum

Ennil Nilaivaramaanavarkae

Enakkaai Nirkum Yesuvukkae

Enakkaai Paesum Yesuvukkae (×2)

Verse 2

நான் எடுத்த தீர்மானங்கள்

ஒன்றன் பின்னால் தோற்றனவே (×2)

சோராமல் எனக்காக உழைப்பவரே

தோற்காமல் துணைநின்று காப்பவரே (×2)

Naan Yedutha Theermaanangal

Ondranpinnaal Thoatranavae (×2)

Soaraamal Enakkaaga Uzhaipavarae

Thoarkaamal Thunai Nindru Kaappavarae (×2)

Verse 3

என் கை மீறி போனதெல்லாம்

உம் கரத்தால் சாத்தியமே (×2)

என் கரம் தவறியே இழந்ததெல்லாம்

உம் கரம் தவறாமல் மீட்டிடுமே (×2)

En Kai Meeri Poanadhellaam

Um Karathaal Saathiyamae (×2)

En Karam Thavariyae Izhandhadhellaam

Um Karam Thavaraamal Meettidumae (×2)

Verse 4

பரிந்துரைகள் செய்யாததை

பரன்கிருபை செய்திடுதே (×2)

தானாக முன்வந்து உதவினீரே

முன்னுரிமை நானென்று காண்பித்தீரே (×2)

Parindhuraigal Seiyyaadhadhai

Paran Kirubai Seidhidumae (×2)

Thaanaaga Munvandhu Udhavineerae

Munnurimai Naanendru Kaanbiththeerae (×2)

Asaathiyangal saathiyame PPT – PowerPoint Slides

Download அசாத்தியங்கள் சாத்தியமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More by John Jebaraj

More Tamil Christian songs starting with A