Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Pearil Thayavaai Irum Lyricsஎன்பேரில் தயவாய் இரும்

Artist to be confirmedFaithWorship

En Pearil Thayavaai Irum Lyrics in Tamil & English

Chorus

என்பேரில் தயவாய் இரும்

Enpaeril thayavaay irum

Chorus

சருவேசுரா ஏழைப்பாவி-என் பேரிலே

தயவாய் இரும் சுவாமி.

Saruvaesuraa aezhaippaavi-en paerilae

Thayavaay irum suvaami.

Bridge

திரியேக பரதேவா நெறி மேவும் ஒரு யோவா

சித்தம் இரங்கிக் காத்துக் கிறிஸ்தின் முகத்தைப் பார்த்து.- சரு

சரணங்கள்

Thiriyaega parathaevaa neri maevum oru yovaa

Siththam irangik kaaththuk kiristhin mugaththaip paarththu.- saru

Saranangal

Verse 1

தந்தை நின் ஒன்றான மைந்தன் தனைக் கொடுத் தித்

தகைமை உலகை நேசித்தாய்-நின்

சொந்தக் கிருபை தனைச் சிந்தித்துணர மறை தொகுத்தெனக் குபதேசித்தாய்

இந்தப் பெரிய நேசம் புந்திக் கொளியதாக்கும்

எந்தப் படியும் என் நிர்ப்பந்தம் அனைத்தும் போக்கும்!-சரு

Thanthai nin ondraana mainthan thanaik koduth thith

Thagaimai ulagai naesiththaay-nin

Sonthak kirubai thanais sinthiththunara marai thoguththenak kubathaesiththaay

Inthap periya naesam punthik koliyathaakkum

Enthap padiyum en nirppantham anaiththum pokkum!-saru

Verse 2

தேவரீர்க் கேற்காத தீவினைகளைச் செய்தும் தண்டியாமல்

பொறுத்தீர் -நீர்

யாவும் அறிந்திருந்தும் கோபித்துக் கைவிடாதென் நன்றி

கேட்டை மறுத்தீர்

ஜீவனே உமக்குப் பாவி பதில் என்செய்வேன்?

மேவி அடி தொழாமல் ஆவி எங்ஙனம் உய்வேன்?- சரு

Thaevareerk kaerkaatha theevinaigalais seythum thandiyaamal

Poruththeer -neer

Yaavum arinthirunthum kobiththuk kaividaathen nandri

Kaettai maruththeer

Jeevanae umakkup paavi pathil enseyvaen?

Maevi adi thozhaamal aavi engnganam uyvaen?- saru

Verse 3

நெஞ்சில் தெய்வ பயம் கொஞ்சம்மேனும் இல்லாமல் நீதி

வழியைக் கடந்தேன்-கெட்ட

வஞ்ச உலக வாழ்வை மிஞ்சத் தேடிப் பேயின் மனதுற்கேற்க நடந்தேன்

பஞ்ச பாவி கூவிக் கெஞ்சும் ஜெபத்தைக் கேளும்

தஞ்சம் என்றேன் உனக்கே அஞ்சல் என்றெனை ஆளும் சரு

Nenjsil theyva payam konjsammaenum illaamal neethi

Vazhiyaik kadanthaen-ketta

Vanjsa ulaga vaazhvai minjsath thaedip paeyin manathurkaerka nadanthaen

Panjsa paavi koovik kenjsum jebaththaik kaelum

Thanjsam endraen unakkae anjsal endrenai aalum saru

En Pearil Thayavaai Irum PPT – PowerPoint Slides

Download என்பேரில் தயவாய் இரும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E