Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kallum Allavae Kaayam Lyricsகல்லும் அல்லவே காயம்

Artist to be confirmedFaith

Kallum Allavae Kaayam Lyrics in Tamil & English

Chorus

கல்லும் அல்லவே, காயம்-வல்லும் அல்லவே-இது

Kallum allavae, kaayam-vallum allavae-ithu

Bridge

வெள்ளி, பொன் விலைமதியா மேரும் அல்லவே. – கல்

சரணங்கள்

Velli, pon vilaimathiyaa maerum allavae. – kal

Saranangal

Verse 1

வல்லமை பேசாதே, நாளை வருவதறியாய்,-அதால்

நல்ல வழி தேடி, தேவ நாமத்தைத் தியானி. – கல்

Vallamai paesaathae, naalai varuvathariyaay,-athaal

Nalla vazhi thaedi, thaeva naamaththaith thiyaani. – kal

Verse 2

சூரியன் கீழ்க் கண்டதெல்லாம் மாயை அல்லவோ?-சாலமோன்

பார் அறிய சொன்னதை நீ பார்த்தறியாயோ? – கல்

Sooriyan keezhk kandathellaam maayai allavo?-saalamon

Paar ariya sonnathai nee paarththariyaayo? – kal

Verse 3

காற்றடித்த மேகம் புகைக்கொப்பதாகவே,-இங்கே

போற்றிய மனுடர் ஜீவன் போய் ஒழியுமே. – கல்

Kaatradiththa maegam pugaikkoppathaagavae,-ingae

Potriya manudar jeevan poy ozhiyumae. – kal

Verse 4

வேகமாய் வடியும் ஆற்றுக் கொப்பதாகவே,-மாய

தேக நரர் நாட்களும் சீக் கிரம் கழியுமே. – கல்

Vaegamaay vadiyum aatruk koppathaagavae,-maaya

Thaega narar naadkalum seek kiram kazhiyumae. – kal

Verse 5

இராப் பகல், இருள், வெளிச்சம் மாறும் வண்ணமே,-ஐயோ!

நராட்களின் மகிழ்ச்சிக்கு மா மாறுதல் உண்டே. – கல்

Iraap pagal, irul, velicham maarum vannamae,-aiyo!

Naraadkalin magizhchikku maa maaruthal undae. – kal

Verse 6

பூவதும் உதிரும், பசும் புல்லும் வதங்கும்.-அது

போலவே நரர் உருவம் மாறி வதங்கும். – கல்

Poovathum uthirum, pasum pullum vathangum.-athu

Polavae narar uruvam maari vathangum. – kal

Verse 7

மேலது கீழ், கீழதுமேல் ஆம் உருளைபோல்,-நரர்

மேன்மையும் வாழ்வும் கீழது மேலும் ஆகுமே. – கல்

Maelathu keezh, keezhathumael aam urulaibol,-narar

Maenmaiyum vaazhvum keezhathu maelum aagumae. – kal

Verse 8

நுண்ணிமை ஞானி என்றாலும் கீர்த்திபெற்றாலும்,-ஐயோ!

அன்னவன் மலையும் நேரம் யாவும் கலையும். – கல்

Nunnimai njaani endraalum keerththibetraalum,-aiyo!

Annavan malaiyum naeram yaavum kalaiyum. – kal

Verse 9

ஆசனம், துரைத்தனம், தத்துவங்கள் ஒழியும்,-அர

சாண்ட மன்னரும் ஒரு நாள் மாண்டொழிவாரே. – கல்

Aasanam, thuraiththanam, thaththuvangal ozhiyum,-ara

Saanda mannarum oru naal maandozhivaarae. – kal

Verse 10

யாவும் ஓட்டமாகப் பாயும், யாவும் அழியும்,-மெய்த்

தேவபக்தி யே கெலிக்கும்; ஜீவன் நிலைக்கும். – கல்

Yaavum ottamaagap paayum, yaavum azhiyum,-meyth

Thaevabakthi yae kelikkum; jeevan nilaikkum. – kal

Kallum Allavae Kaayam PPT – PowerPoint Slides

Download கல்லும் அல்லவே காயம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K