Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neer Vaarumae Karththaavae Lyricsமா அருணோதயமே வாரும்

Artist to be confirmedFaithPraise

Neer Vaarumae Karththaavae Lyrics in Tamil & English

Chorus

மா அருணோதயமே வாரும்

Maa arunothayamae vaarum

Verse 1

நீர் வாருமே கர்த்தாவே ராக்காலம் சென்றுபோம்

மா அருணோதயம் காணவே ஆனந்தம் ஆகுவோம்

Neer vaarumae karththaavae raakkaalam sendrubom

Maa arunothayam kaanavae aanantham aaguvom

Verse 2

நீர் வாரும் பக்தர்கள் களைத்துச் சோர்கின்றார்

நல்லாவி மணவாட்டியும் நீர் வாரும் என்கிறார்

Neer vaarum paktharkal kalaiththus sorkindraar

Nallaavi manavaattiyum neer vaarum engiraar

Verse 3

நீர் வாரும் சிருஷ்டியும் தான் படும் துன்பத்தால்

ஏகோபித்தேங்கி ஆவலாய்த் தவித்து நிற்பதால்

Neer vaarum sirushdiyum thaan padum thunpaththaal

Aegobiththaengi aavalaayth thaviththu nirpathaal

Verse 4

நீர் வாரும் ஆண்டவா மாற்றாரைச் சந்திப்பீர்

இருப்புக்கோலால் தண்டித்துக் கீழாக்கிப்போடுவீர்

Neer vaarum aandavaa maatraarais santhippeer

Iruppukkolaal thandiththuk keezhaakkippoduveer

Verse 5

நீர் வாரும் இயேசுவே பயிர் முதிர்ந்ததே

உம் அரிவாளை நீட்டுமேன் மா நீதிபரரே

Neer vaarum yesuvae payir muthirnthathae

Um arivaalai neettumaen maa neethibararae

Verse 6

நீர் வாரும் வையத்தில் பேர் வாழ்வை நாட்டுவீர்

பாழான பூமி முற்றிலும் நீர் புதிதாக்குவீர்

Neer vaarum vaiyaththil paer vaazhvai naattuveer

Paazhaana poomi mutrilum neer puthithaakkuveer

Verse 7

நீர் வாரும் இராஜாவே பூலோகம் ஆளுவீர்

நீங்காத சமாதானத்தின் செங்கோல் செலுத்துவீர்

Neer vaarum iraajaavae poologam aaluveer

Neengaatha samaathaanaththin sengol seluththuveer

Neer Vaarumae Karththaavae PPT – PowerPoint Slides

Download மா அருணோதயமே வாரும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N