Parisuthaavi Nee Vaarum Lyrics in Tamil & English
Chorus
பரிசுத்தாவி நீ வாரும் திடப்
படுத்தல் பெறுவோர்க் கருள் தாரும்-இன்று
Parisuththaavi nee vaarum thidap
Paduththal peruvork karul thaarum-indru
Bridge
அருளினைப் பெருக்கும் அக்கினி மயமே
ஆவியின் நற்கனி நல்குமா தூயமே
Arulinaip perukkum akkini mayamae
Aaviyin narkani nalkumaa thooyamae
Verse 1
செயல்குண வசனத் தீதுகள் போக
திருச்சபை யதிலிவர் பூரணராக
ஜெயமொடு பேயை எதிர்த்துக் கொண்டேக
ஜெபதப தியானஞ் செய்வதற்காக
Seyalkuna vasanath theethugal poga
Thiruchabai yathilivar pooranaraaga
Jeyamodu paeyai ethirththuk kondaega
Jebathaba thiyaananj seyvatharkaaga
Verse 2
நற்கருணை தனை நலமுடன் வாங்க
நாளரு மேனியாய் ஆவியி லோங்க
சற்குணராய் இவர் சபையைக் கை தாங்க
சகல தீதான பேதங்களும் நீங்க
Narkarunai thanai nalamudan vaanga
Naalaru maeniyaay aaviyi longa
Sarkunaraay ivar sabaiyaik kai thaanga
Sagala theethaana paethangalum neenga
Verse 3
அஞ்ஞானங்க ளோடிவர் சமர் புரிய
அருண்மறை யதினாழங் களையறிய
நெஞ்சினில் அன்பு கொழுந்துவிட் டெரிய
நின்னடியாரிவ ரென்பது தெரிய
Anjnjaananga lodivar samar puriya
Arunmarai yathinaazhang kalaiyariya
Nenjsinil anpu kozhunthuvid deriya
Ninnadiyaariva renpathu theriya
Verse 4
பத்தியுந் தாழ்மையுமா யிவர் உய்ய
பரிசுத்தமான ஜீவியஞ் செய்ய
நித்தமுங் கிருபையின் கனி கொய்ய
நிலைவரமாய் இவராவியில் துய்ய
Paththiyun thaazhmaiyumaa yivar uyya
Parisuththamaana jeeviyanj seyya
Niththamung kirubaiyin kani koyya
Nilaivaramaay ivaraaviyil thuyya
Verse 5
தினமறை யோதி ஜெபித்து மன்றாட
திருச்சபை யதின்ஐக் கியத்தினிற் கூட
உணர்வொடு தொழுது கீதங்கள் பாட
உள்ளத் திருந்து ஜீவாறு களோட
Thinamarai yothi jebiththu mandraada
Thiruchabai yathinaik kiyaththinir kooda
Unarvodu thozhuthu keethangal paada
Ullath thirunthu jeevaaru kaloda
Parisuthaavi Nee Vaarum PPT – PowerPoint Slides
Download பரிசுத்தாவி நீ வாரும் திடப் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Parisuthaavi Nee Vaarum meaning பாடலின் பொருள்
chorus
The singers call on the Holy Spirit to come and to give grace today to those receiving confirmation.
பரிசுத்த ஆவியே, இன்று திடப்படுத்தல் பெறுவோருக்கு அருள் தாரும்.
bridge
The Spirit is addressed as a holy fire who increases grace and as the Pure One who gives the good fruit of the Spirit.
அருளைப் பெருக்கும் அக்கினியான தூய ஆவியே, ஆவியின் கனியைத் தாரும்.
verse
They pray that the candidates' wrongs in deed, character and speech be removed, that they become complete members of the church, and that they may stand victoriously against the devil and devote themselves to prayer and meditation.
இவர்கள் தீமை நீங்கி, சபையில் பூரணராகி, பேயை வென்று ஜெபிக்க அருளும்.
verse
The prayer asks that they receive Holy Communion worthily, grow in the Spirit day by day, become good people who uphold the church, and that all harmful divisions be taken away.
இவர்கள் நற்கருணையை நலமாய்ப் பெற்று, ஆவியில் வளர்ந்து, சபையைத் தாங்க அருளும்.
verse
They ask that the candidates fight against ignorance, understand the depths of the holy Scriptures, have love burning brightly in their hearts, and be clearly known as the Lord's servants.
இவர்கள் வேதத்தின் ஆழத்தை அறிந்து, அன்பால் எரிந்து, உம் அடியார் என விளங்க அருளும்.
verse
The singers pray that the candidates be saved through devotion and humility, live holy lives, gather the fruit of grace every day, and remain steadfastly pure in spirit.
இவர்கள் தாழ்மையோடு பரிசுத்தமாய் வாழ்ந்து, தினமும் கிருபையின் கனி பெற அருளும்.
verse
Finally they ask that the candidates read Scripture and pray daily, join in the fellowship of the church, worship and sing with feeling, and have rivers of living water flowing from within them.
இவர்கள் தினமும் வேதம் வாசித்து ஜெபித்து, சபையோடு கூடி, உள்ளத்தில் ஜீவநதி ஓட அருளும்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.