Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Posanandhanu Mundo Thirurap Lyricsபோசனந்தானு முண்டோ திருராப்

CrossWorshipPraise

Posanandhanu Mundo Thirurap Lyrics in Tamil & English

Chorus

போசனந்தானு முண்டோ திருராப்

போசனம் போலுலகில்

Posananthaanu mundo thiruraap

Posanam polulagil

Bridge

ராசரும் வையக நீசரும் அம்பரன்

நேசரும் யேசுவின் தாசரும் உண்டிடப்

Raasarum vaiyaga neesarum ambaran

Naesarum yaesuvin thaasarum undidap

Verse 1

கர்த்தன் மரணத்தின் சாசன போசனம்

கன்மி கட்கானமெய் நேசத்தின் போசனம்

பத்தரை யன்றாய் இணைத்திடும் போசனம்

பஞ்சகாத்தும் கிடைத்திடும் போசனம்

Karththan maranaththin saasana posanam

Kanmi kadkaanamey naesaththin posanam

Paththarai yandraay inaiththidum posanam

Panjsagaaththum kidaiththidum posanam

Verse 2

பூர்வ ஏற்பாட்டோர்கள் காணாத போசனம்

பொன் வானதூதரும் உண்ணாத போசனம்

ஓர் காலமும் குறைவாகாத போசனம்

ஒப்பில்லான் மாமிசம் ரத்தமாம் போசனம்

Poorva aerpaattorkal kaanaatha posanam

Pon vaanathootharum unnaatha posanam

Or kaalamum kuraivaagaatha posanam

Oppillaan maamisam raththamaam posanam

Verse 3

பஸ்காப் பலியின் பொருள் என்னும் போசனம்

பாவி புசிக்கும் சமாதான போசனம்

நிஷ்கார நிந்தைப் பவம்போக்கும் போசனம்

நின்மலன் தந்திடும் அற்புத போசனம்

Paskaap paliyin porul ennum posanam

Paavi pusikkum samaathaana posanam

Nishkaara ninthaip pavambokkum posanam

Ninmalan thanthidum arputha posanam

Verse 4

மாமலைப் பீடப் பலியான போசனம்

மானிட ஞானத்துக் கெட்டாத போசனம்

ஆமென்று நாங்கள் போதித்திடும் போசனம்

அத்தனார் மெய்மொழியாலான போசனம்

Maamalaip peedap paliyaana posanam

Maanida njaanaththuk kettaatha posanam

Aamendru naangal pothiththidum posanam

Aththanaar meymozhiyaalaana posanam

Verse 5

மாமிசம் அப்பத் தோடே வரும் போசனம்

வல்லன் ரத்தன் ரசத்தோடுறும் போசனம்

பூமியில் மோட்சம் கொணர்ந்திடும் போசனம்

பொய்க் கிறிஸ்தோர்களுக் காக்கினைப் போசனம்

Maamisam appath thodae varum posanam

Vallan raththan rasaththodurum posanam

Poomiyil motcham konarnthidum posanam

Poyk kiristhorkaluk kaakkinaip posanam

Verse 6

ஒப்பனை யென்னக் கூடாதமெய்ப் போசனம்

ஒன்று மற்றொன்றாக மாறாத போசனம்

தப்பற நாங்கள் புசித்திடும் போசனம்

சந்தோஷப் பாவப் பொறுப்பீயும் போசனம்

Oppanai yennak koodaathameyp posanam

Ondru matrondraaga maaraatha posanam

Thappara naangal pusiththidum posanam

Santhoshap paavap poruppeeyum posanam

Verse 7

செத்தும் உயிரோ டெழுப்பிடும் போசனம்

சீவனோ டென்றென்று வாழ்விக்கும் போசனம்

நித்தமுண்டாலும் சலிக்காத போசனம்

நேச சஞ்சீவி யெனுந்திருப் போசனம்

Seththum uyiro dezhuppidum posanam

Seevano dendrendru vaazhvikkum posanam

Niththamundaalum salikkaatha posanam

Naesa sanjseevi yenunthirup posanam

Posanandhanu Mundo Thirurap PPT – PowerPoint Slides

Download போசனந்தானு முண்டோ திருராப் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Posanandhanu Mundo Thirurap meaning பாடலின் பொருள்

chorus

The singer asks whether there is any meal in the world like the holy supper of the Lord. It is a song in praise of the Lord's Supper.

உலகில் கர்த்தருடைய திருவிருந்தைப் போன்ற விருந்து வேறு இல்லை.

bridge

Kings and lowly people of the earth, those loved by the Lord of heaven and the servants of Jesus are all invited to eat this meal together.

அரசரும் எளியவரும் இயேசுவின் அடியாரும் ஒன்றாக இந்த விருந்தை உண்கின்றனர்.

verse

This supper is the covenant meal of the Lord's death and a meal of true love for sinners. It joins believers together as one, and even the poor and hungry can receive it.

இது கர்த்தரின் மரணத்தின் உடன்படிக்கை விருந்து, பாவிகளுக்கான அன்பின் விருந்து, விசுவாசிகளை ஒன்றாக இணைக்கும் விருந்து.

verse

This meal was never seen by the people of the old covenant, and even the golden angels do not eat it. It never runs short, for it is the flesh and blood of the matchless One.

தேவதூதரும் உண்ணாத, ஒருபோதும் குறையாத இந்த விருந்து இணையற்றவரின் மாமிசமும் இரத்தமுமாகும்.

verse

This supper is the true meaning of the Passover sacrifice, a meal of peace that sinners may eat. Given by the spotless Lord, it takes away cruel shame and sin.

பஸ்காவின் பொருளான இந்த சமாதான விருந்து பாவத்தையும் நிந்தையையும் நீக்குகிறது.

verse

This meal comes from the sacrifice offered on the altar of the great hill and is beyond human understanding. The singers affirm it with an "Amen" and teach that it rests on the true word of the Lord.

மலைப் பீடத்தின் பலியான இந்த விருந்து மனித அறிவுக்கு எட்டாதது, கர்த்தரின் மெய்வார்த்தையால் ஆனது.

verse

In this supper the Lord's flesh comes with the bread and the Mighty One's blood with the wine. It brings heaven down to earth, but for false Christians it is a meal of judgment.

அப்பத்தோடு மாமிசமும் இரசத்தோடு இரத்தமும் வரும் இந்த விருந்து பூமியில் மோட்சம் தரும்.

verse

This is a real meal, not a mere picture or imitation, and neither the bread nor the wine is changed into something else. The singers eat it rightly, and it gives the joy of sins forgiven.

இது வெறும் அடையாளமல்லாத, மாறாத மெய்விருந்து; இது பாவமன்னிப்பின் மகிழ்ச்சியைத் தருகிறது.

verse

This holy meal will raise the dead to life and give life that lasts forever. Even when eaten every day it never grows tiresome, for it is the loving, life-giving medicine.

மரித்தோரை எழுப்பி நித்திய வாழ்வு தரும் இந்த திருவிருந்து அன்பின் சஞ்சீவி.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Salvation verses in Tamil →Good Friday and Easter verses in Tamil →Love verses in Tamil →

More Tamil Christian songs starting with P