Ratchaniya Seanai Veerare Lyrics in Tamil & English
Chorus
இரட்சணிய சேனை வீரரே
யுத்தம் செய்தால் ஜெயங் காணலாம்
Ratchaniya saenai veerarae
Yuththam seythaal jeyang kaanalaam
Bridge
அட்சயன் தந்த சர்வாயுத வர்க்கத்தை
அணிந்து மகிழ்ந்து இலங்கித் துலங்கியே!
சரணங்கள்
Atchayan thantha sarvaayutha varkkaththai
Aninthu magizhnthu ilangith thulangiyae!
Saranangal
Verse 1
ஆவியின் கட்கம் வேதமே! அதில்
ஆரோக்கிய சுகபோதமே!
பாவமென்னும் பாணம் பறந்து சிதைந்து விழ
தேவ விஸ்வாசத்தின் கேடகத்தைக் கொண்டு
Aaviyin kadkam vaethamae! athil
Aarokkiya sugabothamae!
Paavamennum paanam paranthu sithainthu vizha
Thaeva visvaasaththin kaedagaththaik kondu
Verse 2
யுத்த முகத்தில் தீர்க்கமாய் நின்று
யுத்தம் செய்யும் ஊக்கமாய்;
சுத்தமாய் இயேசையன் அட்சய நாமத்தை
சந்தோஷமாய்க் கூறி கொண்டாட்டமாய் பாடி
Yuththa mugaththil theerkkamaay nindru
Yuththam seyyum ookkamaay;
Suththamaay yesaiyan atchaya naamaththai
Santhoshamaayk koori kondaattamaay paadi
Verse 3
என்ன வந்தாலும் அஞ்சிடோம் – துன்பம்
இன்பத்தினால் வெல்லுவோம்!
வெண்ணங்கி சங்கீதம் பொன்முடி மோட்சத்தில்
வேண்டுமாகில் இங்கே சாந்தனை ஊக்கமாய்
Enna vanthaalum anjsidom – thunpam
Inpaththinaal velluvom!
Vennangi sangeetham ponmudi motchaththil
Vaendumaagil ingae saanthanai ookkamaay
Ratchaniya Seanai Veerare PPT – PowerPoint Slides
Download இரட்சணிய சேனை வீரரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.