Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Tharunam Ithuvae Kirubai Koorum Lyricsதருணம் இதுவே கிருபை கூரும்

Artist to be confirmedWorshipPraiseFaith

Tharunam Ithuvae Kirubai Koorum Lyrics in Tamil & English

Chorus

தருணம் இதுவே, கிருபை கூரும்,

வழிபாரும், பதம் தாரும், தாரும்.

சரணங்கள்

Tharunam ithuvae, kirubai koorum,

Vazhibaarum, patham thaarum, thaarum.

Saranangal

Verse 1

கருணை தெய்வ குமாரா, கன மனுடவதாரா;

அருமை ரட்சக யேசு நாதா,-உல

கனைத்தும் வணங்கும் சத்ய வேதா,-உன்றன்

அடியர்க் கருளும் திருப் பாதா,-சத்ப்ர

சாதா, நீதா!

Karunai theyva kumaaraa, kana manudavathaaraa;

Arumai ratchaga yaesu naathaa,-ula

Kanaiththum vanangum sathya vaethaa,-undran

Adiyark karulum thirup paathaa,-sathpra

Saathaa, neethaa!

Verse 2

வானத்திலிருந்து வந்த ஞானத்தொளி சிறந்த

மகிமைப் பிரதாவின் திருப் பாலா,-ஆதி

மைந்தர்க் கிரங்கும் அனுகூலா,-கன

விந்தைக் கருணை மனுவேலா,-மெய்ந்

நூலா, சீலா!

Vaanaththilirunthu vantha njaanaththoli sirantha

Magimaip pirathaavin thirup paalaa,-aathi

Mainthark kirangum anugoolaa,-kana

Vinthaik karunai manuvaelaa,-meyn

Noolaa, seelaa!

Verse 3

அற்ப உலக வாழ்வில் அலைந்து, நிலை குலைந்து,

அலகைப்படு குழியில் வீழ்ந்து,-தாழ்ந்து,

அஞ்சி அஞ்சி நலிந் தேனே;-அடிமைக்

கஞ்சல் என்றுசொல்லும் கோனே,-சீ

மானே, தானே!

Arpa ulaga vaazhvil alainthu, nilai kulainthu,

Alagaippadu kuzhiyil veezhnthu,-thaazhnthu,

Anjsi anjsi nalin thaenae;-adimaik

Kanjsal endrusollum konae,-see

Maanae, thaanae!

Verse 4

இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த

சொந்தக் கிருபைகள் மா காத்ரம்,-அவை

சிந்தித்து மடியாவிச் சேத்ரம்,-நிர்ப்

பந்த அடியர்கள் எம் மாத்ரம்!-பத

தோத்ரம்! தோத்ரம்!

Intha ulagath themais santhith thanukkiragiththa

Sonthak kirubaigal maa kaathram,-avai

Sinthiththu madiyaavis saethram,-nirp

Pantha adiyarkal em maathram!-patha

Thothram! thothram!

Tharunam Ithuvae Kirubai Koorum PPT – PowerPoint Slides

Download தருணம் இதுவே கிருபை கூரும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T