Tharisu Nilankal Anaiththum Lyrics in Tamil & English
Chorus
தரிசு நிலங்கள் அனைத்தும் பலன்கொடுக்க வேண்டுமே
வேத வசன விதைகள் எங்கும் விதைக்கப்படவேண்டுமே
தீர்க்கதரிசனம் உரைக்கப்படனும் – தேவ
வாக்குத்தத்தங்கள் நிறைவேறணும்
Tharisu nilangal anaiththum palangodukka vaendumae
Vaetha vasana vithaigal engum vithaikkappadavaendumae
Theerkkatharisanam uraikkappadanum – thaeva
Vaakkuththaththangal niraivaeranum
Verse 1
வேத வசனம் அது தேவ வசனம் – அதை
அறிவிப்பதும் நம் கடனல்லவா?
விதைத்திடுங்கள் வசனம் விதைத்திடுங்கள்
கோதுமை மணிகளாய் பயன்பட வாழுங்கள் (×2)
Vaetha vasanam athu thaeva vasanam – athai
Arivippathum nam kadanallavaa?
Vithaiththidungal vasanam vithaiththidungal
Kothumai manigalaay payanpada vaazhungal (×2)
Verse 2
இயேசுவின் இரட்சிப்பினை சொல்வது இலட்சியமா?
இலக்கை இழந்தால் உப்புத்தூண் அல்லவா?
தயங்குவதா? தரித்து நிற்பதா?
கலப்பையில் கைவைத்து பின் திரும்பிப் பார்ப்பதா (×2)
Yesuvin ratchippinai solvathu ilatchiyamaa?
Ilakkai izhanthaal uppuththoon allavaa?
Thayanguvathaa? thariththu nirpathaa?
Kalappaiyil kaivaiththu pin thirumbip paarppathaa (×2)
Verse 3
பாரத விளைநிலம் முற்றிலும் விளைந்தது
புண்ணிய நதிகளில் மூழ்கிட விரையுது
அறுத்திடுவோம் சுயத்தை பதறாக்குவோம்
ஜெபித்து ஜெபித்து பின் களத்தை நிரப்புவோம் (×2)
Paaratha vilainilam mutrilum vilainthathu
Punniya nathigalil moozhkida viraiyuthu
Aruththiduvom suyaththai patharaakkuvom
Jebiththu jebiththu pin kalaththai nirappuvom (×2)
Tharisu Nilankal Anaiththum PPT – PowerPoint Slides
Download தரிசு நிலங்கள் அனைத்தும் பலன்கொடுக்க வேண்டுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.