Tharuvadhan Porulai Lyrics in Tamil & English
Chorus
*காணிக்கை*
*பல்லவி*
தருவதன் பொருளை உலகினிலே
தினமும் சொல்லும் பலியினிலே
உம்மையே தருகின்ற இறைவா
என்னையே தருகின்றேன் உமக்கு (×2)
*kaanikkai*
*pallavi*
Tharuvathan porulai ulaginilae
Thinamum sollum paliyinilae
Ummaiyae tharugindra iraivaa
Ennaiyae tharugindraen umakku (×2)
Verse 1
*சரணம்1*
எல்லோரும் ஒன்றாக உம் பாதம்
நன்றாக உறவாடும்
இந்நேரமே பலிபீடம்
நானும் வந்தேன்
என் வாழ்வை பலியாக்குவேன் (×2)
மாறாத அன்பாலே
எனை என்றும் கண்பாருமே (×2)
*saranam1*
Ellorum ondraaga um paatham
Nandraaga uravaadum
Innaeramae palibeedam
Naanum vanthaen
En vaazhvai paliyaakkuvaen (×2)
Maaraatha anpaalae
Enai endrum kanpaarumae (×2)
Verse 2
*சரணம் 2*
உலகோரும் இந்நாளே
உம் மீட்பைக் கண்ணாலே
பார்த்திடும் இந்நேரமே
உம் சித்தம் *நிறைவேற்றுவேன்*
பிறரன்புப் பணியாற்றுவேன் (×2)
தேயாத நிலவாகவே
எனை என்றும் நான் தருவேன் (×2)
*saranam 2*
Ulagorum innaalae
Um meedpaik kannaalae
Paarththidum innaeramae
Um siththam *niraivaetruvaen*
Piraranpup paniyaatruvaen (×2)
Thaeyaatha nilavaagavae
Enai endrum naan tharuvaen (×2)
Tharuvadhan Porulai PPT – PowerPoint Slides
Download தருவதன் பொருளை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.