Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaan Pugal Valla Lyricsவான் புகழ் வல்ல தேவனையே

Artist to be confirmedFaithPraise

Vaan Pugal Valla Lyrics in Tamil & English

Chorus

வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்

வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே

காத்திடும் கரகதின் வல்லமையை என்றும்

கனிவுடன் பாடியே போற்றிடுவோமே

Vaan Pugal Valla Thaevanaiyae Nitham

Vaalthiyae Thuthiyam Seythiduvomae

Kaathidum Karamathin Vallamaiyai Entrum

Kanivudan Paadiyae Pottiduvomae

Verse 1

யாக்கோபின் ஏணியின் முன் நின்றவர் தாம்

யாக்கோபின் தேவனின் சேனை அவர் தாம்

யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர்

நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே

Yakobin Yeanniyin Mun Nintravar Thaam

Yakobin Thaevanin Senai Avar Thaam

Yaathiraiyil Nammai Soolnthidum Karthar

Naethiram Pol Paathu Kaathiduvaarae

Verse 2

பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்து

இரட்சித்தாரே வீர தானியேலின் தேவன்

அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம்

கர்த்தன் தன் சேனைகொண்டு காத்திடுவாரே

Patchikkum Singangal Vaayilirunthu

Ratchithaarae Veera Thaaniyaelin Thaevan

Arputha Adaiyaalam Nikalthiyae Niththam

Karthan Than Senaikondu Kaathiduvaarae

Verse 3

உக்கிரமாய் எரியும் அக்கினி நடுவில்

சுற்றி உலாவின நித்திய தேவன்

மகிமையின் சாயலாய் திகழ்ந்திடும் கர்த்தர்

முற்றும் தம் தாசரைக் காத்திடுவாரே

Ukkiramaay Eriyum Akkini Naduvil

Sutti Ulaavina Nithiya Thaevan

Magimaiyin Saayalaay Thikalnthidum Karthar

Muttrum Tham Thaasarai Kaathiduvaarae

Verse 4

சிறைச்சாலைக் கதவுகள் அதிர்ந்து நொறுங்க

சீஷரை சிறை மீட்டார் சத்திய தேவன்

சத்துருவின் எண்ணங்கள் சிதறுண்டு மாள

சேனைகளின் கர்த்தர் காத்திடுவாரே

Siraichalai Kathavukal Athirnthu Norunga

Seesharai Sirai Meettar Sathiya Thaevan

Sathuruvin Ennangal Sitharundu Maala

Senaikalin Karthar Kaathiduvaarae

Verse 5

அழைத்தனரே தம் மகிமைக்கென்றே எம்மை

தெரிந்தெடுத்தாரே தம் சாயலை அணிய

வழுவ விடாமலே காத்திடும் தேவன்

மாசற்றோராய் தம்முன் நிறுத்திடுவாரே

Alaiththanarae Tham Makimaikkentre Emmai

Therintheduthaarae Tham Saayalai Aniya

Valuva Vidaamalae Kaaththidum Thaevan

Maasattoraay Thammun Niruthiduvaarae

Verse 6

மகத்துவ தேவன் வானில் ஆயத்தமாக

மகிமையாய் நிற்கிறார் சடுதியாய் இறங்க

மணவாளன் வரும்வேளை அறியலாகாதே

மணவாட்டி சபையே நீர் விழிப்புடனிருப்பீர்

Makathuva Thaevan Vaanil Aayathamaaka

Makimaiyaay Nirkiraar Saduthiyaay Iranga

Manavaalan Varumvaelai Ariyalaakaathae

Manavaatti Sabaiyae Neer Vilippudan Iruppeer

Vaan Pugal Valla PPT – PowerPoint Slides

Download வான் புகழ் வல்ல தேவனையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V