Vin Mannai Aalum Lyrics in Tamil & English
Verse 1
விண் மண்ணை ஆளும் கர்த்தரே,
எவ்வாறு உம்மை நேசித்தே
துதிப்போம்? நன்மை யாவுமே
நீர் ஈகிறீர்.
Vin mannai aalum karththarae,
Evvaaru ummai naesiththae
Thuthippom? nanmai yaavumae
Neer eegireer.
Verse 2
உம் அன்பைக் கூறும் மாரியும்,
வெய்யோனின் செம்பொன் காந்தியும்,
பூ, கனி, விளை பயிரும்,
எல்லாம் ஈந்தீர்.
Um anpaik koorum maariyum,
Veyyonin sembon kaanthiyum,
Poo, kani, vilai payirum,
Ellaam eentheer.
Verse 3
எம் ஜீவன், சுகம், பெலனும்,
இல்வாழ்க்கை, சமாதானமும்,
பூலோக ஆசீர்வாதமும்
எல்லாம் ஈந்தீர்.
Em jeevan, sugam, pelanum,
Ilvaazhkkai, samaathaanamum,
Poologa aaseervaathamum
Ellaam eentheer.
Verse 4
சீர்கெட்ட மாந்தர் மீள நீர்
உம் ஏசு மைந்தனைத் தந்தீர்
மேலும் தயாள தேவரீர்
எல்லாம் ஈந்தீர்.
Seerketta maanthar meela neer
Um aesu mainthanaith thantheer
Maelum thayaala thaevareer
Ellaam eentheer.
Verse 5
தம் ஜீவன், அன்பு, பெலனை
ஏழாம் மா நல் வரங்களை
பொழியும் தூய ஆவியை
அருள்கிறீர்.
Tham jeevan, anpu, pelanai
Aezhaam maa nal varangalai
Pozhiyum thooya aaviyai
Arulkireer.
Verse 6
மன்னிப்பும் மீட்பும் அடைந்தோம்
மேலான நம்பிக்கை பெற்றோம்
பிதாவே பதில் என் செய்வோம்
எல்லாம் ஈந்தீர்.
. தன்னயம் நஷ்டமாகுமே
உமக்களிக்கும் யாவுமே
குன்றாத செல்வம் கர்த்தரே
எல்லாம் ஈந்தீர்.
Mannippum meedpum adainthom
Maelaana nambikkai petrom
Pithaavae pathil en seyvom
Ellaam eentheer.
. thannayam nashdamaagumae
Umakkalikkum yaavumae
Kundraatha selvam karththarae
Ellaam eentheer.
Verse 7
தர்மத்தைக் கடன் என்பதாய்
பதில் ஈவீர் பன்மடங்காய்
இக்காணிக்கையைத் தயவாய்
ஏற்றுக்கொள்வீர்.
Tharmaththaik kadan enpathaay
Pathil eeveer panmadangaay
Ikkaanikkaiyaith thayavaay
Aetrukkolveer.
Verse 8
உம்மாலே பெற்றோம் யாவையும்
தர்மத்தைச் செய்ய ஆசையும்
உம்மோடு நாங்கள் வாழவும்
அருள் செய்வீர்.
Ummaalae petrom yaavaiyum
Tharmaththais seyya aasaiyum
Ummodu naangal vaazhavum
Arul seyveer.
Vin Mannai Aalum PPT – PowerPoint Slides
Download விண் மண்ணை ஆளும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.