Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thanksgiving Bible Verses in Tamil

Verses of thanksgiving and praise.

  1. அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  2. கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.

    O give thanks unto the LORD, for [he is] good: for his mercy [endureth] for ever.

    Psalm 107:1 (சங்கீதம் 107:1)
  3. எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

    In every thing give thanks: for this is the will of God in Christ Jesus concerning you.

    1 Thessalonians 5:18 (1 தெசலோனிக்கேயர் 5:18)
  4. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.

    [A Psalm] of David. Bless the LORD, O my soul: and all that is within me, [bless] his holy name. Bless the LORD, O my soul, and forget not all his benefits:

    Psalm 103:1–2 (சங்கீதம் 103:1–2)
  5. வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.

    And what soever ye do in word or deed, [do] all in the name of the Lord Jesus, giving thanks to God and the Father by him.

    Colossians 3:17 (கொலோசெயர் 3:17)
  6. கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.

    O give thanks unto the LORD; for [he is] good: for his mercy [endureth] for ever.

    Psalm 136:1 (சங்கீதம் 136:1)
  7. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,

    Giving thanks always for all things unto God and the Father in the name of our Lord Jesus Christ;

    Ephesians 5:20 (எபேசியர் 5:20)
  8. கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.

    To the chief Musician upon Muthlabben, A Psalm of David. I will praise [thee], O LORD, with my whole heart; I will shew forth all thy marvellous works.

    Psalm 9:1 (சங்கீதம் 9:1)
  9. ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.

    By him therefore let us offer the sacrifice of praise to God continually, that is, the fruit of [our] lips giving thanks to his name.

    Hebrews 13:15 (எபிரெயர் 13:15)
  10. இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.

    This [is] the day [which] the LORD hath made; we will rejoice and be glad in it.

    Psalm 118:24 (சங்கீதம் 118:24)
  11. சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.

    Let every thing that hath breath praise the LORD. Praise ye the LORD.

    Psalm 150:6 (சங்கீதம் 150:6)
  12. நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்கு தெரியப்படுத்துங்கள்.

    Be careful for nothing; but in every thing by prayer and supplication with thanksgiving let your requests be made known unto God.

    Philippians 4:6 (பிலிப்பியர் 4:6)

Thanksgiving songs in Tamil

More Bible verses in Tamil

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.