Vindoor Kiristesu Lyrics in Tamil & English
Verse 1
விண்டார் கிறிஸ்தேசு – குணப்பட
வென்றே ஒரு உவமை
உண்டு ஒருவனுக்குப் – புதல்வர்
இரண்டவரிலிளைஞன்
Vindaar kiristhaesu – kunappada
Vendrae oru uvamai
Undu oruvanukkup – puthalvar
Irandavarililainjan
Verse 2
தந்தையே எந்தனுக்குத் தனத்தினில்
வந்திடும் பங்கதனை
தந்திடுமென்று கேட்டுத் – தவறாமல்
தன் வீதம் வாங்கிக்கொண்டான்
Thanthaiyae enthanukkuth thanaththinil
Vanthidum pangathanai
Thanthidumendru kaettuth – thavaraamal
Than veetham vaangikkondaan
Verse 3
சென்றானயல் தேசம் – துன்மார்க்கங்கள்
செய்தான் பல தோஷம்;
தின்றா னெலாம் நாசம் – வறிஞனாய்த்
தீர்ந்தான் வெகு மோசம்
Sendraanayal thaesam – thunmaarkkangal
Seythaan pala thosham;
Thindraa nelaam naasam – varinjanaayth
Theernthaan vegu mosam
Verse 4
பஞ்சத்தினால் மெலிந்து – வயிற்றுப்
பசியினால் வருந்தி
பஞ்சம் பிழைக்கவென்று – ஒருவனைத்
தஞ்சமென்று சார்ந்தான்
Panjsaththinaal melinthu – vayitrup
Pasiyinaal varunthi
Panjsam pizhaikkavendru – oruvanaith
Thanjsamendru saarnthaan
Verse 5
பன்றிகளை மேய்த்தான் – தவிட்டினால்
பசியாற நினைத்தான்;
பன்றிக்கிடுந்தவிடும் – கிடையாமல்
பட்டினியாய்க் கிடந்தான்
Pandrigalai maeyththaan – thavittinaal
Pasiyaara ninaiththaan;
Pandrikkidunthavidum – kidaiyaamal
Pattiniyaayk kidanthaan
Verse 6
புத்தி மிகத் தெளிந்து – புலம்பினான்
மெத்தப் பசி ஐயையோ!
எத்தனை பேர்க்குணவோ – பூர்த்தியாய்
என் பிதா வீட்டிலுண்டு!
Puththi migath thelinthu – pulambinaan
Meththap pasi aiyaiyo!
Eththanai paerkkunavo – poorththiyaay
En pithaa veettilundu!
Verse 7
எழுந்து இப்பொழுதே – ஏகுவேன்
என் பிதாவின் சமுகம்
விழுந்து நான் தொழுதே – குற்றத்தை
விள்ளுவே னென்றுரைத்தான்
Ezhunthu ippozhuthae – aeguvaen
En pithaavin samugam
Vizhunthu naan thozhuthae – kutraththai
Villuvae nendruraiththaan
Verse 8
தந்தையை வந்து கண்டான் – தரை மட்டும்
தாழ்ந்து தொழுதழுதான்
எந்தையே உந்தனுக்கும் – பரத்துக்கும்
ஏற்காத தோஷி என்றான்
Thanthaiyai vanthu kandaan – tharai mattum
Thaazhnthu thozhuthazhuthaan
Enthaiyae unthanukkum – paraththukkum
Aerkaatha thoshi endraan
Verse 9
மைந்தன் மறுகுவதும் – அவன் ரூபம்
மாறி யிருப்பதுவும்
கந்தை யணிந்ததுவும் – கண்டு பிதா
நொந்து மனம் மெலிந்தான்
Mainthan maruguvathum – avan roobam
Maari yiruppathuvum
Kanthai yaninthathuvum – kandu pithaa
Nonthu manam melinthaan
Verse 10
சுத்திகரித்தெடுத்து – உயர்ந்த
சுத்த ஆடை தரித்து
மெத்த விருந்தளித்து – சந்தோஷ
நித்தப்பவுசளித்தான்
Suththigariththeduththu – uyarntha
Suththa aadai thariththu
Meththa virunthaliththu – santhosha
Niththappavusaliththaan
Verse 11
இந்த இளைஞனைப்போல் – குணப்படா
தெந்தெந்தப் பாவிகளும்
வந்து அறிக்கை செய்தால் – இயேசு பாவம்
மன்னித்தாசி அளிப்பார்
Intha ilainjanaippol – kunappadaa
Thenthenthap paavigalum
Vanthu arikkai seythaal – yesu paavam
Manniththaasi alippaar
Vindoor Kiristesu PPT – PowerPoint Slides
Download விண்டார் கிறிஸ்தேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.